துணி வாங்க கூடப்போன புருஷனுக்கே இந்த நிலைமைன்னா.. சேல்ஸ்மேன் உயிரோட இருப்பான்னு நினைக்குற?
தீபாவளி ஷாப்பிங் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: தீபாவளி நெருக்கமாகி விட்டதால், வீடுகளில் கொண்டாட்டங்கள் களை கட்டுவது மாதிரியே, சமூகவலைதளங்களிலும் மீம்ஸ் கொண்டாட்டங்கள் தெறிக்கவிட ஆரம்பித்து விட்டன.
இன்னும் சில தினங்களில் தீபாவளி வர இருக்கிறது. போனஸ், புத்தாடை எடுப்பது, பலகாரங்கள் செய்வது, பட்டாசு வாங்குவது என மக்கள் கொண்டாட்ட மோடுக்கு மாறி விட்டனர். தீபாவளிக்கு புதுத்துணி எடுப்பதையே திருவிழா மாதிரி சில குடும்பங்கள் கொண்டாடுவார்கள். இந்த வருட தீபாவளிக்கு இந்தக் கலரில் தான் உடை எடுக்க வேண்டும் என கடந்தாண்டே சிலர் முடிவு செய்து வைத்து விடுவார்கள். அந்தக் கலரில் இந்தாண்டு டிரெண்டிங்கில் உள்ள பேஷனைக் கலந்து, தங்களுக்கு பிடித்தமாதிரி உடை எடுக்க அவர்கள் எத்தனைக் கடைகள் ஏறி இறங்கவும் தயங்க மாட்டார்கள்.
ஆனால் இந்த பிடித்த மாதிரி உடை எடுக்கும் கொடுப்பினை எல்லாம், எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. கருப்பு, வெள்ளை கூடாது.. கட்டம் கூடாது, வட்டம் கூடாது என ஏகப்பட்ட கூடாதுகளைச் சொல்லித்தான் சிறியவர்களைப் பெரியவர்கள் ஷாப்பிங்கே அழைத்துச் செல்வார்கள்.
அலைமோதும் கூட்டத்திற்கு நடுவே, என்னவோ ஹெட்போனில் பேசுவதாக நினைத்துக் கொண்டு, 'உனக்கு ஜட்டி, பனியன் வாங்கிக்கோ.. எல்லாம் ஓட்டை ஓட்டையா ஆகிடுச்சு..' என பப்ளிக்கில் அசிங்கப்படுத்துவார்கள் சில அம்மாக்கள்/அப்பாக்கள். ஷாப்பிங் போனால்தான் இப்படிப்பட்ட காமெடிக் காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்றில்லை. சமூகவலைதளங்களில் இதுபோன்ற யதார்த்தமான காட்சிகளை மீம்ஸ்களாக்கி சிரிக்க வைத்துள்ளனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான தீபாவளி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications