ஒரு வேலை சொன்னா ஒழுங்கா செய்றது இல்ல.. இதுல ஆண்கள் தினம் வாழ்த்து சொல்லணுமாம்ல..!
ஆண்கள் தினத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: சர்வதேச ஆண்கள் தினம் முடிந்துவிட்ட பிறகும், ஆண்களை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வழக்கமாக பெண்கள் தினத்திற்கு இருக்கிற வரவேற்பு, பெரும்பாலும் ஆண்கள் தினத்திற்கு இருப்பதில்லை. நேற்றும் அதுபோலவே சத்தமில்லாமல் ஆண்கள் தினம் முடிந்து விட்டது. பெண்கள் தினத்திற்கு தாங்கள் வாழ்த்து கூறியது போலவே, சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவியும் என எதிர்பார்த்த பாவப்பட்ட ஆண்களுக்கு, வழக்கம்போலவே ஏமாற்றமே மிஞ்சியது.

இப்படி ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக ஆண்கள் தினம் முடிந்துவிட்டதே என ஏற்கனவே மீம்ஸ் போட்டு சோகத்தில் இருக்கும் ஆண்களுக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மாதிரி, கூடுதல் எக்ஸ்ட்ராவாக (ரெண்டும் ஒண்ணுதான் பாஸ்...) மனைவிகள் தங்கள் ஸ்டைலில் ஆண்கள் தினத்தை கொண்டாடுவது போல் மீம்ஸ்கள் போட்டு வெறுப்பேற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...















Click it and Unblock the Notifications