இனிமே உன் பேரு அக்னி நட்சத்திரம் இல்ல.. அக்னி குளிரூட்டி.. என்னா குளிரு குளிருது!
கோடையில் பெய்து வரும் மழையைப் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: வெயில் ஒரு பக்கம் அடித்தாலும், இதமாக மழையை உறுதி செய்வது போல் காற்றும் வீசி வருவதை வைத்து ஜாலி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அக்னி நட்சத்திர வெயிலையே காமெடி பீஸாக்கி விட்டது இந்த கோடை மழை. இதை நினைத்து அக்னி நட்சத்திரம் ரொம்பவே வருத்தப்படுவது மாதிரி மீம்ஸ்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றன. 'இனிமேல் உன் பெயர் அக்னி நட்சத்திரம் இல்லை... அக்னி குளிரூட்டி' என பெயரையே மாற்றும் அளவிற்கு போய் விட்டனர் நெட்டிசன்கள்.

வழக்கமாக அக்னி நட்சத்திரத்தில் வெயில் கொளுத்தும் என கோடை விடுமுறை விடுவார்கள். ஆனால் இம்முறையோ அக்னி நட்சத்திரமே நமக்கு சில நாட்கள் விடுமுறை கொடுத்து, மண்ணையும், மனதையும் குளிர வைத்து விட்டது.

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, இன்று தான் சூரியன் கொஞ்சம் சுள்ளென சுட்டிருக்கிறது. ஆனாலும் மழை இருக்கிறது என்பதைக் காற்று சொல்லாமல் சொல்லி வருகிறது. இப்படி ஒரு கிளைமேட் கிடைத்தால் கவிஞர்கள் மட்டுமல்ல.. மீமர்களும் விடுவார்களா?

இதோ விதவிதமாய் ஜாலி மீம்ஸ்களை இணையத்தில் பகிர ஆரம்பித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications