கணவரோடு சண்டை போடாத மனைவிக்குத்தான் அந்த ரூ.1000 உரிமைத்தொகையாம்.. இதெப்படி இருக்கு!
சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தங்களுக்கு சாதகமாக வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து மனைவிகளை கலாய்த்து வருகின்றனர் குறும்புக்கார கணவர்கள் சிலர்.

மனைவியைக் கலாய்ப்பது என்றால் எப்போதுமே கணவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரிதான். அதனால்தான் அடிக்கடி மனைவிகளைப் பற்றிய கணவர்களின் புலம்பல் மீம்ஸ்கள் டிரெண்ட்டிங்காகி விடுகிறது. இப்போதும் அப்படித்தான் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை வைத்து விதவிதமாக மீம்ஸ்களைப் போட்டு மனைவிகளைக் கலாய்த்து வருகின்றனர்.
'கணவரோடு சண்டை போடாத மனைவிகளுக்கு மட்டும்தான் மாதம் ரூ. 1000 உதவித்தொகையாம்..' என்பது மாதிரியான மீம்ஸ்கள், கணவர்கள் பாவம் எவ்வளவு அடி வாங்கி இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது (வீட்டுக்கு வீடு வாசப்படிதான் பாஸ்..).
கூடவே, இதையே சாக்காக வைத்து, தகுதியில்லாத குடும்பத்தலைவிகளை கையோடு அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என கணவர்கள் திட்டமிடுவதாக உள்ள மீம்ஸ்கள் எல்லாம் வேற லெவல் கற்பனை. மனைவி ஊருக்கு கிளம்பி விட்டாலே, 'என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா...' என கணவர்கள் துள்ளிக் குதிப்பார்கள். அப்படி இருக்கையில், கற்பனைதான் என்றாலும் இப்படி ஒரு கான்செப்ட் கிடைத்தால் விடுவார்களா? தங்களால் முடிந்தளவுக்கு சமூகவலைதளங்களில் இப்படியான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
பின்குறிப்பு: இந்த மீம்ஸ்களை உங்கள் மனைவியிடம் காட்டி நீங்கள் அடி வாங்கினால், அதற்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல...






-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications