ஜனவரி முடியுதுனு சந்தோசபடுறதா.. இல்ல பிப்ரவரி லவ்வர்ஸ்டேக்கு லவ்வர் இல்லனு பீல் பண்றதா!
சென்னை : ஜனவரி மாதம் முடியப் போவதை வைத்தும், பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதை வைத்தும் விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஜனவரி மாதத்தை எப்போதுமே மக்கள் கொண்டாடித் தீர்ப்பது வழக்கம். ஏனென்றால் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என அதிக விடுமுறை நாட்களும், கொண்டாட்டமும் அதிகமாக இருக்கும். அதனாலேயே ஜனவரி மாதம் முடியப் போகிதென்றால் மக்களுக்கு கொஞ்சமல்ல.. நிறையவே வருத்தமாக இருக்கும்.

இதில் போதாக்குறைக்கு பிப்ரவரி மாதம் காதலர் தினம் வருவதால், இந்த காதலர்கள் செய்யும் அலப்பறையை தாங்க முடியாதே என்ற கவலையும் அவர்களிடம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் பிறந்ததில் இருந்து, 14ம் தேதி காதலர் தினம் வரை தினமும் ஒரு ஸ்பெஷல் தினத்தை வைத்து காதலைக் கொண்டாடுகிறேன் என காதலில் இல்லாதவர்களை வெறுப்பேற்றுவார்கள்.
அதைத்தான், “ஜனவரி முடியுதுனு சந்தோசபடுறதா.. இல்ல பிப்ரவரி லவ்வர்ஸ்டேக்கு லவ்வர் இல்லனு பீல் பண்றதா!” என்றும், “பிப்ரவரி மாசம் வருது.. நாம வாழவே தகுதி இல்லங்கற மாதிரி இந்த லவ்வர்ஸ் மனஉளைச்சலை உண்டாக்குவாங்களே!” என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக....
















Click it and Unblock the Notifications