For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாமரை கோ ஆபரேட் பண்ணு தாமரை.. மோடி முதல் ஓபிஆர் வரை.. கலாய்த்து தள்ளிய மீம் மேக்கர்ஸ்.. பங்கம்!

லோக்சபா தேர்தல் முடிவுகளால் அரசியல் கட்சிகள் எவ்வளவு அல்லோகலப்பட்டதோ அதே அளவிற்கு இணையமும் மீம்களால் சிக்கி சின்னாபின்னமானது

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவின் வெற்றியை வெளுத்து வாங்கிய சர்வதேச பத்திரிகைகள்

    சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளால் அரசியல் கட்சிகள் எவ்வளவு அல்லோகலப்பட்டதோ அதே அளவிற்கு இணையமும் மீம்களால் சிக்கி சின்னாபின்னமானது.. தேர்தல் முடிவு வந்த அன்று இணையம் முழுக்க மீம்களின் ராஜ்ஜியம்தான்.

    லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகளின்படி பாஜக மொத்தம் 303 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வென்றது. இதன் மூலம் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் தோல்வியை கலாய்த்தும், தமிழகத்தில் பாஜகவின் நிலையை கிண்டல் செய்தும் இணையத்தில் நிறைய மீம்கள் போடப்பட்டுள்ளது. அதில் சிறந்த மீம்களின் தொகுப்பு இதோ!

    குசும்பு பாஸ்

    குசும்பு பாஸ்

    லோக்சபா தேர்தலில் தனக்கு ஓட்டு போடுவதாக நினைத்து மக்கள் ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு வாக்கு போட்டுவிட்டதாக அமமுக தங்க தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டி இருந்தார். அதை இவர் கிண்டல் செய்துள்ளார்.. இதெல்லாம் ஓவர் குசும்பு பாஸ்!

    திருமாவளவன் வெற்றி

    விசிக தலைவர் திருமாவளவன் கடும் இழுபறிக்கு பின்பே சிதம்பரம் தொகுதியில் வென்றார். அதை இவர் அழகாக வர்ணித்துள்ளார்.

    கம்பீர் அமைச்சர்

    கவுதம் கம்பீர் இந்தியாவின் மத்திய விளையத்துறை அமைச்சர் ஆக வாய்ப்புள்ளது என்கிறார்கள். தோனிக்கு கவுதம் கம்பீருக்கும் நீண்ட நாட்களாக சிறு சிறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. அதனால், கவுதம் கம்பீர் தோனியின் பாகிஸ்தான் ரசிகர்கள் உள்ள புகைப்படங்களை பார்த்து விட கூடாது என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.

    தமிழ்நாடு நிலை

    தமிழ்நாட்டில் பாஜகவில் நிலை.. தாமரை கோ ஆபரேட் பண்ணு தாமரை!

    அமித் ஷா

    கேம் ஆப் திரோன்ஸ் சீரியலில் பதவி ஏற்பது போல ஸ்மிரிதி இராணி பதவி ஏற்பார் என்று இவர் மீம் போட்டுள்ளார்.

    தமிழ்நாடு கேரளா

    எல்லோரும் ஒருபக்கம் போனா இந்த தமிழ்நாடு, கேரளா மக்கள் மட்டும் வேறு பக்கம் போறாங்களே!

    எவ்வளவு வேகம்

    தேர்தல் முடிவே இப்பதானே வந்தது.. அதுக்குள்ள வெளிநாடு பயணமா பாஸ்?

    எங்கு போகலாம்

    தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து வெளிநாடு பயணம் செல்வதற்காக மோடி கூகுளில் சர்ச் செய்து கொண்டு இருக்கிறார்.

    இவங்க வேற

    இதற்கு மத்தியில் சர்கார் பட கோபத்தில் விஜய் பேன்ஸ்தான் அதிமுகவை தோல்வி அடைய செய்தது என்று சில கொளுத்தி போட்டார்கள். அதை இவர் கிண்டல் செய்துள்ளார்.

    என்ன ஒரு குஷி

    தேர்தலில் வெற்றிபெற்ற குஷியில் தூம் மியூசிக் பாடலை வாசிக்கும் மோடி என்று இவர் காமெடியாக எடிட் செய்துள்ளார்.

    அந்த நாள்

    தேர்தல் ரிசல்ட் அப்போ எல்லோரும் இப்படித்தான் உட்கார்ந்து இருந்தாங்க பாஸ்!

    தனோஸ் இவர்தான்

    எதிர்க்கட்சியை எல்லாம் ஒரே சொடக்குல இல்லாம ஆக்கிட்டார்... மோடிதான் இந்தியாவின் தானோஸ்!

    ஓ . பி. ஆர் ராகிங்

    தனியாக 37 திமுக கூட்டணி எம்எல்ஏக்களுடன் சென்றிருக்கும் அதிமுக ரவீந்திரநாத்தின் நிலை.. சிரிக்க மட்டும் மக்களே!

    என்ன நிலை

    எதிர்க்கட்சிகளின் நிலை இதுதான் மக்களே!

    English summary
    Lok Sabha elections results 2019 memes: Netizens trolled everyone from Modi to OPS son OPR.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X