பிறந்தநாள்! எக்ஸாம் ரிசல்ட்! எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்லுவான் இந்த "பவரு"! டிரெண்டான விஜய் மீம்ஸ்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தொடர்ந்து வாழ்த்து அறிக்கை மட்டும் வெளியிடுவதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒற்றுப்பிழை இருந்த நிலையில் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் தேர்தல் சமயத்தில் சின்னம் வழங்கப்படலாம். அடர் சிவப்பு நிறத்தில் அந்த கட்சிக்கு கொடி மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய் அரசியல்: நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ள நிலையில் செயலி ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன்படி அரசியல் பணிகளை நிர்வகிக்க வேண்டும், செயலியில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும், நேரடியாக மக்கள் குறைகளை கேட்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கட்சிக்கான நிதியை பெற வேண்டும், அறிக்கைகளை வெளியிட வேண்டும், மக்களுடன் எளிதாக தொடர்பில் இருக்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக என்று தனியாக ஒரு செயலியை வெளியிட்டு இருக்கிறாராம்.

நிர்வாகிகள் நியமனம்: அதோடு கட்சி சார்பாக 100 நிர்வாகிகளை பதவியில் அமர வைக்க உள்ளாராம். அதாவது 100 நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சியின் அடிமட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளாராம். கடைசியாக பூத் கமிட்டியை சென்னையில் மட்டும் முதல் கட்டமாக அமைப்பது தொடர்பான பணிகளை விஜய் முடிவு எடுக்க உள்ளாராம். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறதாம்.
பேசவில்லை: என்னதான் விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லிவிட்டாலும் முக்கிய பிரச்சனைகளில் குரல் கொடுப்பதே இல்லை.

உதாரணமாக தற்போது நடந்து வரும் நீட் முறைகேடு விவகாரத்தில் குரல் கொடுக்கவில்லை. போதை பொருள் விவகாரம் பற்றி பேசவில்லை. தேசிய அளவிலான பிரச்சனைகள் பற்றி பேசுவது இல்லை. ஏன் உள்ளூர் அளவில் கூட பிரச்சனைகள் பற்றி பேசுவது இல்லை.
ஆந்திர பிரதேசத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வென்றது என்றால் பிரச்சனைகளுக்கு அந்த கட்சி குரல் கொடுத்தது. மக்களுக்காக இரவு நேரங்களில் கூட பவன் போராட சென்றார். பல பிரச்சனைகளில் முதல் ஆளாக அந்த கட்சி களத்தில் நின்றது.

ஆனால் விஜய் அப்படி எதுவும் செய்வது இல்லை. ஏன் கண்டன அறிக்கைகளை கூட விடுவது இல்லை. அவர் பெரும்பாலும் செய்வதெல்லாம் பல்வேறு விஷயங்களுக்காக வெளியிடும் வாழ்த்து அறிக்கை மட்டும்தான்.
மீம்ஸ்: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தொடர்ந்து வாழ்த்து அறிக்கை மட்டும் வெளியிடுவதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதில் , பிறந்தநாளு Exam Result பதவி ஏற்பு விழா எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்லுவான்டா இந்த பவரு என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

என்ன அரசியல் இவ்ளோ ஈசியா இருக்குது, என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர். அதேபோல் வாழ்த்து மட்டும் சொல்வதால் தமிழக வாழ்த்துக் கழகம் என்றும் பெயர் வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர். வாழ்த்து சொல்வதில் அந்தகன் படத்தை beat பண்ணிருவான் போல என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications