சென்னைக்கு அவசரமாக இநத மாதிரி 4 பஸ் தேவை பாஸ்...! #ChennaiRains

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில் மழை தொடர்பான வித்தியாசமான கற்பனை ஓட்டங்களை தட்டிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள் அவற்றில் சில உங்களுக்காக.

பருவமழை இதுவரை இல்லாத அளவில் தென்மேற்குப் பருவமழை கர்நாடகா, கேரள மாநிலங்களில் ஒரு காட்டு காட்டியது. அங்கு பருவமழை முடிந்த நிலையில் தமிழகத்தை நோக்கி மையம் கொண்டுள்ளது வடகிழக்குப் பருவமழை. தொடக்கமே அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது பருவமழை.

மழையால் மக்களுக்கு பாதிப்பு இருந்தாலும் 2 நாட்களாக விடுமுறை கிடைத்ததால் குஷியில் உள்ளனர் குட்டீஸ். மழையை ஒட்டி நெடிசன்கள் பற்ற விடும் சில மழை மீம்ஸ்ன் சுவாரஸ்ய தொகுப்பு

மழையை நிறுத்தும் சக்தி

மழை தேவை என்று பலர் நினைத்தாலும், 48 மணி நேரமாக மழைநீர் சூழ்ந்திருக்கும் பகுதியில் உள்ளவர்கள் இப்போதைக்கு மழை வேண்டாம் என்றே நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களுக்காகத் தான் இந்த மீம்.மழையை நிறுத்தும் சக்தி பள்ளி விடுமுறை என்ற அறிவிப்புக்கு மட்டுமே உண்டு என்று ஜாலி டுவீட் செய்துள்ளார் இவர்.

4 பஸ்கள் அவசரம்

அமெரிக்கா, லண்டனைப் போல தமிழகத்தில் மழை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையின் சாலைகளில் மழை நீர் சூழ்ந்திருக்கிறது. இதனால் சென்னைக்கு அவசரமாய் இப்படிப்பட்ட 4 பஸ்கள் தேவை !!! என்று வெளிநாட்டில் பயன்படுத்தும் பேருந்தை பதிவிட்டுள்ளார் இந்த வலைபதிவாளர்.

நகரை மிரட்டும் தண்ணீர்

சென்னைப் பெருநகரின் கதை இது தாங்க. ஜனவரி முதல் அக்டோபர் வரை தண்ணீர் பஞ்சம், நவம்பர் முதல் டிசம்பர் வரை நகரை மிரட்டும் தண்ணீர் என்று சமயத்திற்கு தகுந்தார் போல டுவீட்டியுள்ளார் இவர்.

இப்ப யார் கிட்ட அபராதம் கேட்பது?

டெங்கு கொசுவை ஒழிக்க வீடுகளில் தேங்கிய தண்ணீருக்காக அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இப்போது சாலைகளில் தேங்கி இருக்கும் தண்ணீருக்கு யாரிடம் அபராதம் விதிப்பது என்று நியாயம் கேட்கிறது இந்த மீம்ஸ்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Northeast monsoon and the effects of Chennai, social media trolling it with different types of memes some interresting collections here for you.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X