தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்குது! வடகிழக்கு பருவமழை குறித்து நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் மழையை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சென்னையில் நேற்று அதிகாலை முதல் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள நீரால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர்.

மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. காலை முதல் சற்று ஓய்வெடுத்த மழை தற்போது மீண்டும் வெளுக்க தொடங்கியுள்ளது. சென்னை மழை குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தெளிய வச்சு தெளிய வச்சு

அவ்வை சண்முகி படத்தில், டெல்லி கணேஷை தெளிய வச்சி தெளிய வச்சி அடிக்கிறாபோல சென்னை மக்களை விட்டு விட்டு மழை அடிக்குது..! என்கிறார் இந்த நெட்டிசன்

நாங்களும் மனுஷங்கதான்

மத்த ஊர்ல மழை பெஞ்சா ஒரு மாறியும் சென்னைல மழை பெஞ்சா ஒரு மாறியும் பாக்குறானுக #டேய் நாங்களும் மனுஷங்கதான்டா... என்கிறார் இந்த வலைஞர்

சாலைகளில் கூட நீர்மட்டம்..

ஏரிகளில் மட்டுமல்ல... சாலைகளில் கூட நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்

இயற்கையே வெல்லும்

இயற்கையின் வாழ்வுதனை மிருகம் கவ்வும்
இறுதியில் இயற்கையே வெல்லும் என்கிறது இந்த டிவிட்

இல்ல விட்டுலயே இருக்கலமா?

ஆஃப்ஸ்க்கு போலாமா? இல்ல விட்டுலயே இருக்கலமா? மொத்தத்தில் சென்னையில் இருக்கலாமா இல்ல வேண்டாமா கேட்டு சொல்லு !!! என்கிறார் இந்த நெட்டிசன்

தண்ணீர் ஊற்ற பாத்திரம் தேடினா..

#மழை பெய்தால் பஜ்ஜி, போண்டா செய்ய பாத்திரம் தேடினா அது #மதுரை..
தண்ணியை எடுத்து ஊத்த பாத்திரம் தேடினால் #சென்னை..! என கலாய்க்கிறார் இந்த வலைஞர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of chennai rain. Its raining over Tamil nadu including Chennai.
Please Wait while comments are loading...