பண்டிகை நாள்ல பெருங்களத்தூர் ட்ராஃபிக்குக்கு இந்த மழை ஒன்னும் பயமில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையை கைவிட்ட ஓலாவும், ஊபரும்..வீடியோ

  சென்னை: கொட்டித் தீர்க்கும் மழையை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருன்றனர்.

  வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதில் இருந்தே சென்னையில் மழை வெளுத்துவாங்கி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக இரவில் கொட்டிய மழை இன்று பகலிலும் வெளுத்து வாங்கி வருகிறது.

  சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

  இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் மழை குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் அவற்றில் சில..

  இது ஒன்னும் பயமில்லை

  பண்டிகை காலங்களில் பெருங்களத்தூர் ட்ராஃபிக் இருக்கும் வரை, சென்னை மழை பயமுறுத்த போவதில்லை... என்கிறார் இந்த வலைஞர்

  அய்யோ மழை

  அடடா மழை என்றால் தென் தமிழகமாம்..
  அய்யோ மழை என்றால் சென்னை வாசிகள்... என்று டிவிட்டியுள்ளார் இந்த நெட்டிசன்

  ஊரு பத்திரம்..

  சென்னை:போய் தொல
  மழை:நாங்க போவோம் இல்ல இங்கயே பெஞ்சிட்டே இருப்போம் உனக்கென்ன?வீட்டுக்குள்ள பூந்து அலசுவோம். ஊரு பத்திரம் என்கிறது இந்த டிவிட்

  விசித்திர நகரம் சென்னை

  முதல் நாள் வெள்ளம் வர மாதிரி மழை பெய்யுது... அடுத்த நாள் வெயில் அடிச்சா மழை வந்த அறிகுறியே இல்லாம இருக்கு..
  #விசித்திரநகரம் சென்னை.. என்கிறார் இந்த வலைஞர்

  சந்தபொந்தெல்லாம்..

  சென்னையில் ஆட்டேகாரர்களுக்கே தெரியாத சந்து பொந்து எல்லாம் அறிந்தும் சுலபமாய் சென்றடைவதும்
  #சென்னைமழை வெள்ளம் மட்டும்தான்.. என்கிறது இந்த டிவிட்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of chennai rain and flood. There was heavy rain in Chennai last night. Lots of memes also roaming on Social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற