வங்கிகளே ஆதார் எண்ணை அக்கவுண்டுடன் இணைக்க வேண்டும் என இமெயில் அனுப்புவதை இனியாவது நிறுத்துவீர்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை- வீடியோ

  சென்னை: ஆதார் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இனியாவது வங்கிகள் மெயில் அனுப்புவதை நிறுத்துமா என சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

  பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ஆதார் வழக்கின் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்-ஐ இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  ஆதார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆதார் கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இனியாவது வங்கிகள் ஆதார் கட்டாயம் என மெயில் அனுப்புவதை நிறுத்துமா என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

  இனியாவது நிறுத்துவீர்களா?

  வங்கிகளே ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்க வேண்டும் என இமெயில் அனுப்புவதை இனியாவது நிறுத்துவீர்களா? என கேட்கிறார் இந்த வலைஞர்

  இன்பாக்ஸ் நிரம்புகிறது

  இந்த வங்கிகளும் டெலிகாம் நிறுவனங்களும் ஆதாரை இணைக்கக்கோரி இன்பாக்ஸை மெயில் மற்றும் மெசேஜால் நிரப்பி வருகிறது. இப்போதாவது ஸ்பேம் மெயில் அனுப்புவதை நிறுத்துங்கள் என்கிறார் இந்த நெட்டிசன்

  நிம்மதியா இருக்கு

  என்ன நிம்மதி.. தீர்ப்பு வரும் வரை, வங்கி கணக்கு, செல்போன் எண்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது என்கிறார் இந்த நெட்டிசன்

  1% மக்கள் தான்

  தற்போது 99% சதவீத மக்கள் தங்களின் அனைத்து கணக்குகளுடனும் ஆதார் எண்ணை இணைத்து விட்டார்கள், இப்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 1% மக்கள் மட்டும் தான் ஆதாரை இணைக்கவில்லை, அவர்களிடம் தான் இந்தியாவின் 99% செல்வம் உள்ளது. என்கிறார் இந்த நெட்டிசன்

  நெருக்கமாக உள்ளது

  உச்ச நீதிமன்றம் தனி நபர் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு வரலாற்று தீர்ப்புக்கு நெருக்கமாக உள்ளது.. என்கிறார் இந்த வலைஞர்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens sharing their views on Aadhaar. Supreme court says Aadhaar card is not mandatory for linking with bank account.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற