சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நீங்க சினிமா ஹீரோக்களுக்கு வில்லனே..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நிஜ வாழ்க்கையிலும் நடிகர் பிரகாஷ் ராஜ், ஹீரோக்களுக்கு வில்லனாகி விட்டார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் குறித்து அண்மைக் காலமாக விமர்சித்து வருகிறார். நேற்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ் நடிகர்கள் என்ற தகுதியை வைத்துக் கொண்டு கட்சி தொடங்குவது என்பது நாட்டிற்கு பேரழிவு என பிரகாஷ்ராஜ் கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில..

சபாஷ்.!!!

நடிகர்கள் தலைவராவதால் நாட்டுக்கு மிகப் பெரும் பேரழிவு- பிரகாஷ்ராஜ் பொளேர்
#நடிகர்களைப்பற்றி சக நடிகர்களுக்குத்தானே தெரியும்!! சபாஷ்.!!! என்கிறார் இந்த நெட்டிசன்

நீங்கல்லாம் கருத்து சொல்வதே..

நடிகர்கள் அரசியல் கட்சி துவங்குவது நாட்டுக்கு நாசம் - பிரகாஷ்ராஜ் செல்லம், நீங்கல்லாம் சகட்டுமேனிக்கு புத்தியில்லாம கருத்து சொல்ல ஆரம்பிச்சதே நாட்டுக்கு மாபெரும் நாசம் செல்லம்.. என்கிறார் இந்த வலைஞர்

ஒரு சீட்டு ஒதுக்கு..

டேய்.. அண்ணனுக்கு நம்ம கட்சியில ஒரு சீட்டு ஒதுக்கு.. என்கிறார் இந்த வலைஞர்

முட்டாள்தனமில்லையா?

நடிகர் பிரகாஷ்ராஜ் சொன்ன கருத்தை உன்னிப்பாக கவனியுங்கள் நடிகர்கள் அரசியல் தலைவராக வந்தால் நாட்டுக்கு நல்லதல்ல உதாரணம் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என்ன நடந்தது? நடிகர்கள் ஆட்சி சரியில்லையென்று வேறு நடிகர்களை தேர்வு செய்யுறீங்க இது முட்டாள்தனமில்லையா என கேட்கிறது இந்த டிவிட்

ஹீரோக்களுக்கு வில்லனே

நடிகர் பிரகாஷ்ராஜ் திட்டவட்டம்: ரஜினி, கமல் கட்சி தொடங்கினால் ஆதரிக்க மாட்டேன்
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நீங்க சினிமா ஹீரோக்களுக்கு வில்லனே..!! என்கிறார் இந்த வலைஞர்

ஹீரோவாக பேசறாரு

வில்லன்னாக பார்த்த பிரகாஷ்ராஜ் இன்று அசல் ஹீரோவாக பேசறாரு.. என்கிறார் இந்த நெட்டிசன்

பரவாயில்லையா?

அப்போது நிஜ வாழ்கையில் நடிக்கும் நடிகர்கள் தலைவரானால் பரவாயில்லையா? என கேட்கிறார் இந்த வலைஞர்..

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens Supporting and opposing Actor Prakash Raj statement on Actors arrival in Politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற