சந்தைக்கு போகனும்.... ஆத்தா வையும் காசு குடு... ரூ20 டோக்கனை முன்வைத்து தெறி மீம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரூ. 20 டோக்கனுக்கு பணம் கேட்டு நச்சரிப்பு...வீடியோ

  சென்னை : ஆர்கே நகர் தொகுதியின் தினகரன் தரப்பு வெற்றி பெற்றால் 10 ஆயிரம் ரூபாய் தருவதாக டோக்கனாக வழங்கிய 20 ரூபாய் நோட்டுகள் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இந்நிலையில் டோக்கன் கதையை வைத்து பலரும் மீம்ஸ், கருத்துகளால் டுவிட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர். அவற்றின் சில சுவாரஸ்ய தொகுப்புகள்.

  சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஆனால் தேர்தல் முடித்து அந்த தொகுதியின் எம்எல்ஏவாக தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலும் பரபரப்பு ஓய்ந்தபாடில்லை.

  அதற்கு முக்கியக் காரணம், தினகரன் ஜெயித்தால் 10 ஆயிரம் ரூபாய் பணம் தரப்படும் என்று வழங்கப்பட்ட ரூ. 20 டோக்கனே. தினகரன் வெற்றி பெற்ற நிலையில் பணத்தை கேட்டு வாக்காளர்கள் தினகரன் தேர்தல் பணியாளர்களை நச்சரிக்க நேற்று இந்த விவகாரம்போலீஸ் வரை சென்று 4 பேர் ஆதாரங்களுடன் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தை வைத்து டுவிட்டரில் பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

  இதெப்படி இருக்கு

  16 வயதினிலே பட சீனைப் போட்டு சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசு குடுன்னு ஆர்.கே நகர் தொகுதி மக்கள் கேட்பதாகவும். இது எப்படி இருக்குன்னு தினகரன் கேட்பது போலவும் கற்பனையை தட்டிவிட்டுள்ளார் நெட்டிசன்.

  பாகுபலியுடன் ஒப்பீடு

  20 ரூபாய் டோக்கன் வாங்கிய மக்களுக்கு தினகரன் தரப்பு ஷாக் கொடுத்து விட்டது. இதனை குறிப்பிடும் வகையில் பாகுபலி பட சீரியஸ் காட்சியை போட்டு சபாஷ் வாங்கியுள்ளார் இவர்.

  தேர்தலுக்குப் பிறகு இப்படி

  தேர்தலுக்கு முன்னாடி ஓட்டுக்கு 20 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கிகோங்கன்னு சொன்னாங்க. தேர்தலுக்கு அப்புறம் ஓட்டுக்கு 20 ரூபாய் வெச்சிக்கிட்டு டோக்கன் போட்டுக்க சொல்றாங்க என்று ஷாக்காகி பார்க்கின்றனர் ஆர்கே நகர் மக்கள்

  போச்சா

  ஆர்கே நகரில் 450 பேருக்கு ரூ. 20 டோக்கன்... போலீசில் சிக்கியவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்ற செய்தியை இவர் டுவீட் செய்துள்ளார். அதற்கு கமென்ட்டாக சோன முத்தான் போச்சா...போச்சா என்று நக்கலடித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens trolling RK nagar people who got Rs. 20 as token for voting in favour of Dinakaran and now urging them to give the money after ttv victory.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற