தெறிக்க விடும் வடகிழக்கு பருவமழை.. கொண்டாடும் மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் அதிகாலை முதல் அடித்து ஆடும் மழை...

  சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில் அதனை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

  கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் நொந்து போயுள்ள மக்கள் வடகிழக்குப் பருவமழையை கொண்டாடி வருகின்றனர். எத்தனை அவதி ஏற்பட்டாலும் வறட்சியை போக்கும் அளவுக்கு மழை கொட்ட வேண்டும் என்றும் மக்கள் வேண்டி வருகின்றனர்.

  ஸ்கூல் லீவு விடுவாங்களான்னு

  சுட்டி சேனல் பார்த்துட்டு இருந்த பசங்க நியூஸ் சேனல் பாக்குறாங்க. ஸ்கூல் லீவு விடுறாங்களான்னு.
  செம்ம #மழை #சென்னை #ஹாப்பி_ரைனி_மார்னிங் என்கிறது இந்த டிவிட்

  வானம் அழுதால் நமக்கு சிரிப்பு

  கண்ணீருக்கு விடுமுறை. எனக்கு பதிலாக வானம் அழுகிறது இன்று.
  #சென்னை #மழை
  பிகு: ஆபீஸ்கு லீவு இல்லை... என வருத்தப்படுகிறது இந்த டிவிட்

  இடிகூட இசைதான்

  இடி சத்தம் கூட இசைதான் அருகில் விழாத வரை.. என கூறுகிறார் இந்த வலைஞர்

  இனிமேதான் இருக்கு கனமழை

  வடகிழக்கு பருவமழை கண்ணா இது வரை பார்த்தது சாம்பிள்தான் !!! இன்மேல்தான் வரப்போகுது கனமழை !! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை !! என கூறுகிறார் இந்த நெட்டிசன்

  மாமழையை போற்றுவோம்

  தொடங்கியது நாகையில் வடகிழக்கு பருவமழை.... மாமழையை போற்றுவோம்.. என வரவேற்கிறார் இந்த வலைஞர்

  தெறிக்க விடும் மழை

  தெறிக்க விடும் வடகிழக்கு பருவமழை.. #கன்னியாகுமரி மக்கள் மகிழ்ச்சி.. என்கிறது இந்த டிவிட்

  வெள்ளம்

  எல்லோர் மனதிலும் தத்தளித்தால்அது நல்ல #உள்ளம்.
  எல்லாம் தத்தளித்தால் அங்கே #வெள்ளம்... என்கிறார் இந்த நெட்டிசன்

  பேருந்தின் உள்ளே மழை

  பேருந்துக்கு வெளியே மழை நின்ற பின்பும் பேருந்தின் உள்ளே மழை... சென்னை மாநகர பேருந்துகள்... என்கிறது இந்த டிவிட்

  வந்தாலும் கவலை

  மழை வரலனாலும் கவலை படுறானுக வந்தாலும் கவலை படுறானுக திஸ் சென்னை கய்ஸ்.. என்கிறார் இந்த வலைஞர்

  சென்னை மழை அழகு

  செல்போன் நனையா சென்னை மழை அழகு! என்கிறது இந்த டிவிட்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens welcomes north east monsoon. Its raining over Tamil nadu including Chennai.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற