பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம் தலைவரே... ரஜினிகாந்த் மீம்ஸ் ட்ரோல்
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆகிவிடுவார் நாம் எம்எல்ஏ ஆகிவிடலாம் என்று கரைவேட்டி கனவில் மிதந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார். ரஜினியின் இன்றைய அறிவிப்புக்கு பலரும் ட்விட்டரில் மீம்ஸ் பதிவிட்டு வருக
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று 1996 முதல் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது அவரது அறிவிப்பு. அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருப்பதால் சமூக வலைத்தளங்களில் பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகமடையச் செய்தார் ரஜினிகாந்த். 20 நாட்கள் கூட அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை அதற்குள் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் ட்விட்டரில் எந்த பதிவு போட்டாலும் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் அரசியலுக்கு வரப்போவதில் என்ற அறிவிப்பை வைத்து பலவிதமாக மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
|
இலவுகாத்த கிளி
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ஆசையோடும் அதிக எதிர்பார்ப்போடும் காத்துக்கொண்டிருந்த ரசிகர்களை இலவுகாத்த கிளிகள் என்று கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.
— க.தமிழ் முருகன் (@murugakathir05) December 29, 2020 |
சார் டீ கேன்சல்
வடிவேல் படத்தில் வரும் டீ கேன்சன் சீனை வைத்து ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு ரத்து செய்தியை மேட்ச் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.
|
எனக்கு சரிப்பட்டு வராது
என் நண்பர்கள் எப்பவோ எனக்கு சொன்னாங்க. நீ ரொம்ப நல்லவன், நேர்மையானவன், இந்த அரசியல் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு சொன்னாங்க. என் நண்பர்கள் பேச்சை மதிச்சி கட்சியை கட்சிங்கிற சொத்தை கலைச்சிட்டேன் என்று கூறிய சீனை இந்த சந்தர்ப்பத்தில் சரியாக பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.
|
இப்படி ஆயி போச்சே
எந்திரன் படத்தில் சிட்டி ரஜினிகாந்த் தனது காந்த சக்தியால் ஆயுதங்களை தன்னிடம் ஈர்த்துக்கொள்வார். அதைப்பார்த்து பெண்கள் மாரியம்மன் வந்து விட்டதாக கூறி சாமியாடுவார்கள். சட்டென்று ஆயுதங்களை கீழே போட்ட உடன் என்னாடி இப்படி ஆயிப்போச்சே என்று அங்கலாய்ப்பார்கள். அது போல ரஜினியின் ட்விட்டர் பதிவை பார்த்து போன வாரமெல்லாம் ரஜினி ரசிகர்கள் கரைவேட்டி கனவில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இன்றைய அறிவிப்பு ரஜினி ரசிகர்களை சோர்வடைய வைத்து விட்டது.
|
கட்சி இல்ல போடா
சின்ன மிஸ்டேக்.. Now or Never இல்ல Now and Never கட்சி இல்லை போடா. இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று ரஜினி அறிக்கையை அவருக்கே திருப்பி போட்டு இப்போ இல்லை... எப்பவுமே இல்லை ட்ரோல் செய்துள்ளார் இந்த நெட்டிசன்
|
ரஜினிக்கு அச்சம்
வெற்றியாளனாகவே இருக்கும் ரஜினி. தோல்வியை கண்டு அஞ்சுகிறார் என்பதே அரசியல் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.
|
பருத்தி மூட்ட குடோன்லேயே இருந்து இருக்கலாம்
கட்சியை அறிவிக்கப்போவதாக ட்விட்டரில் பதிவிட்டு, பின்னர் அதே ட்விட்டரில் கட்சி அறிவிக்க மாட்டேன் என்று அறிவித்து விட்டார் ரஜினிகாந்த். இதுக்கு பேசாம பருத்திமூட்ட குடோன்லேயே இருந்து இருக்கலாம் தலைவரே என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications