For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படியொரு சென்னையை பார்த்ததுண்டா யுவர் ஆனர்.. ஊட்டி என்ன விலை? நடுங்கிய மக்கள்! டிரெண்டிங் மீம்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வானிலை திடீரென குளிராக மாறி உள்ளது. நேற்று மாலையில் இருந்து குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.

வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. சென்னையில் இருந்து 150 கிமீ தூரத்தில் இந்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டு உள்ளது. இந்த தாழ்வு மண்டலம் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்படி நகராமல் நின்றதுதான் சென்னையில் தற்போது குளிர்ச்சியான வானிலைக்கு காரணம். இந்த தாழ்வு மண்டலம் கடலில் இருக்கிறது.

இதனால் கடலில் மழை பெய்கிறது.சென்னையில் மழை இல்லை. இதனால் இப்போது இந்த தாழ்வு மண்டலம், குளிர்ந்த காற்றை சென்னையை நோக்கி நகர்த்தி உள்ளது. இந்த குளிர்ந்த காற்றுதான் தற்போது சென்னையில் நிலவும் குளிர்ச்சியான வானிலைக்கு காரணம். சென்னையில் இன்று அதிகாலை பல இடங்களில் 17 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. இன்று இரவும் சென்னையில் குளிரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்னும் ஆறே மணி நேரம்தான்! பட்டென வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்திய வானிலை மையம் இன்னும் ஆறே மணி நேரம்தான்! பட்டென வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்திய வானிலை மையம்

குளிர்ச்சி

குளிர்ச்சி

சென்னையில் வெப்பநிலை குறைந்து குளிரான வானிலை நிலவுவதை அடுத்து பலரும் இதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றன. இணையம் முழுக்க இதுதான் தற்போது டிரெண்டாகி உள்ளது. இதனால் ட்விட்டரில் தற்போது #ChennaiSnow என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் சென்னை ஊட்டி போல இருக்கிறது. ஊட்டி என்ன விலைன்னு கேளு.. சுவிட்சர்லாந்து என்ன விலைன்னு கேளு என்று சொல்லும் அளவிற்கு வரிசையாக மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

மீம்ஸ்

மீம்ஸ்

பொதுவாக சென்னை என்றாலே வெப்பமாகதான் இருக்கும். இந்தியாவில் இருக்கும் சூடான நகரங்களில் சென்னையும் ஒன்று. வடஇந்தியர்கள் பலரும் சென்னை சூடாக இருக்கிறது என்று புகார் வைப்பார்கள். இந்த நிலையில்தான் இன்று வடஇந்தியர்கள் வியக்கும் அளவிற்கு சென்னையில் திடீரென வானிலை குளிராக மாறி உள்ளது. இன்று காலை இணையத்தில் நெட்டிசன்கள் பலர் வானிலை மாற்றத்தை பார்த்து அதை டிரெண்டு செய்து கொண்டு இருந்தனர். வடஇந்தியர்கள் பலர்.. என்னது சென்னையில் குளிரா என்று தேடுவது போல மீம்ஸ் போடப்பட்டு உள்ளது.

சென்னை குளிர்

சென்னை குளிர்

சென்னையில் நேற்று இரவில் இருந்தே வெப்பநிலை குறைவாக இருந்தது. இதனால் பலர் பேனை ஆப் செய்துவிட்டு போர்வைக்குள் தஞ்சம் புகுந்தனர். போர்வையை சுற்றி போற்றிக்கொண்டு, உள்ளேயே முடங்கும் நிலைக்கு சென்றனர். இப்படி போர்வைக்குள் இருப்பதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இன்னும் டிசம்பர் மாசம் வரவில்லை. அதற்குள் இவ்வளவு குளிரா என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

இதுதான் சென்னை

இதுதான் சென்னை

அதேபோல் பலர்.. இதுதான் சென்னை என்று கூறி பல புகைப்படங்களை பகிர்ந்தும் டிரெண்டு செய்து வருகின்றனர். அதன்படி சுவிட்சர்லாந்து, கனடாவில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து பாருங்கள் இதுதான் சென்னை நேப்பியர் பாலம். இதுதான் சென்னை அடையார் பாலம் என்று போட்டோக்களை போட்டு வருகின்றனர். முழுக்க முழுக்க பணியால் நிரம்பி கிடக்கும் இடங்களை போட்டோ எடுத்து போட்டுள்ளனர். ஆனால் சென்னையில் குளிராக இருந்தால் இந்த அளவிற்கு பனி பெய்யவில்லை.

வாகன ஓட்டிகள்

வாகன ஓட்டிகள்

சென்னையில் வாகன ஓட்டிகள் அதிகம் சிரமப்பட்டனர். இரவு நேரத்தில் குளிர் காரணமாக வாகனங்களை மெதுவாக ஓட்டினர். அதேபோல் சாலையிலும் பெரிதாக எதுவும் தெரியவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் காலையிலும் கடுமையான பனிமூட்டம் நிலவியது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டினர். இதை வைத்தும் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

சென்னை

சென்னை

இன்று அதிகாலை மற்றும் நேற்று இரவு வானிலை சென்னையில் பெங்களூரை விட குளிராக இருந்தது. நேற்று இரவு பெங்களூரில் வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியஸ். சென்னையில் நேற்று இரவு வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸ் என்று அளவில் இருந்தது. அதிகாலை 18 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் இருந்தது. பெங்களூரை விட சென்னை அதிக குளிராக இருந்தது. இதை வைத்தும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். சென்னையில் பனி பெய்வதை திருவிழா போல நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

English summary
Trending memes on Chennai snow and weather: WHy the city is so cold?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X