பார்த்து பத்திரமா.. நசுக்கிடாம.. அந்த ‘தங்கத்தை’ வீட்டுக்கு எடுத்துட்டு வரணும்!
தக்காளி விலை உயர்வு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: வெங்காய விலை தான் அடிக்கடி உயர்ந்து கண்ணீரை வரவழைக்கும் என்றால், தக்காளியும் அதற்கு சளைத்ததில்லை என இப்போது நிரூபித்து வருகிறது.
நம்மூர் சமையலில் தவிர்க்க இயலாத பொருட்களில் தக்காளியும் ஒன்று. பெரும்பாலான உணவுகளுக்கு சுவை கொடுப்பதே தக்காளிதான். இதனால்தான் திடீர் தக்காளி விலை உயர்வால் மக்கல் ரொம்பவே திணறிப் போய் உள்ளனர்.

மழை, வெள்ளம் என ஒருபக்கம் கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு, இந்த விலையுயர்வு மேலும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெங்காயம், தக்காளி, காய்கறி வாங்கி வைத்துக் கொள்ளலாம் என கடைக்குப் போனவர்களுக்கெல்லாம் தக்காளி விலை அதிர்ச்சியைக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு பக்கம் விலைவாசியால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, வழக்கம் போல் நெட்டிசன்கள் மீம்ஸ்களால் இதை ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications