Tuesday Vibes: ஒரு காதல் என்பது.. !

Subscribe to Oneindia Tamil

காதல் என்றால் என்ன.. நிறையப் பேருக்கு அதன் உள்ளார்ந்த அர்த்தம் எந்த அளவுக்குப் புரிந்திருக்கும் என்று தெரியவில்லை.. இரு மனங்களின் ஈர்ப்பு மட்டுமே காதலா என்றால் நிச்சயம் இல்லை.. அதையும் தாண்டிய உணர்வுதான் காதல்.

ஒரு மனதுடன் வாழும் இரு உடல்கள்.. இதுதான் காதல்.. இதுவும்தான்.. ஆனால் இதையும் தாண்டி என்னவெல்லாம் காதலில் இருக்கிறது தெரியுமா...

Love is a feeling

மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்பது போல மனிதராகப் பிறந்த அனைவருக்கும் காதல் உண்டு. அன்பின் வெளிப்பாடு தான் காதல். பிறந்த குழந்தைக்குத் தன் தாயின் மீது காதல். வளர்ந்தவுடன் எதிர்பாலினத்தவர் மீது காதல். ஆசை காமம் அன்பு பாசம் இவற்றின் வெளிப்பாடு தான் காதல்.

காதல் என்பது வேறு ஈர்ப்பு என்பது வேறு. உங்களுக்கு ஒருவர் மீது ஈர்ப்பு உண்டாகிறதெனில் அது சில நேரங்களில் தீவிரமாக மாறலாம். அதாவது அவர்களை எப்போதும் நினைத்துகொண்டே இருத்தல், பேசிக்கொண்டே இருக்க வேண்டும், அவர்களைக் குறித்து கற்பனையில் வாழுதல் போன்றவை தோன்றும். இந்த செயல்கள் உங்களை அவர்களுக்காக எதையும் செய்யத் தூண்டும். ஆனால் இந்த உணர்வுகள் என்பது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. அந்த விஷயத்தை முழுமையாக அடையும் வரைதான் அதன் மீதான ஈர்ப்பு. அதோடு காதலில் ஈர்ப்பு இருக்கலாம். ஆனால் ஈர்ப்பு காதலாக முடியாது என்பதே உண்மை.

நமக்கு ஒருவர் மீது ஈர்ப்பு இருந்தால் அவர் நம்மிடம் நெருக்கமானவுடன் அந்த ஈர்ப்பு மறைந்துவிடும். ஆனால் காதல் அப்படியில்லை இரு மனங்கள் இணைந்து உணர்வுகளால் மனதால் இணைவதே காதல். காதல் அது ஒரு அழகிய சுகானுபவம்.

காதல் செய்வது தவறில்லை. உண்மையாக மனதால் ஒருவரை முழுமையாக ஒருவரைக் காதலிக்கும் போது மனதில் பட்டாம்பூச்சி பறக்கும். எதைப் பார்த்தாலும் அவர் முகம் தெரியும். பூக்களின் மீது வரும் காதலும் அம்மாவின் மீதும் வரும் காதலை விட உங்கள் எதிர்பாலினத்தவரின் மீது காதல் ஏற்படும் போது அந்த உணர்வு மிகவும் அலாதியானது.

வாழும் வாழ்க்கையை அழகாக அனுபவித்து வாழ வேண்டுமென்றால் ஒவ்வொரு நொடியும் காதலோடு வாழுங்கள். காதல் என்பது உடல் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது. வாழ்க்கையில் காதல் இருந்தால் வாழ்வு ருசிக்கும். காதலின் சுகம் மிகவும் அலாதியானது. இரு மனம் சேர்ந்தது மட்டும் காதல் இல்லை, உணர்ச்சிகள் நிறைந்த இதயங்களின் ஓசை தான் காதல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+