ஏமாற்றத்தால் கோபத்தில் இருக்கிறீர்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. டக்கென்று மாறும் மனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் நம்பியவர்களால், நேசித்தவர்களால் ஏமாற்றப்படும் போது கோபம் நம்மை அறியாமலே வந்து விடுகிறது.

இந்த கோபத்தால் நம்மை நேசிப்பவர்களை நாம் காயப்படுத்துகிறோம். இதை மாற்றுவதற்கான வழிகளை தான் நான் உங்களோடு பகிர்கிறேன் நண்பர்களே.!

 Motivational Quotes Are you angry because of disappointment? Then read this

இதை படிப்பதால் மட்டும் ஒன்றும் மாறிவிடாது.. இதை நீங்கள் மனதில் ஏற்றுக் கொண்டால் எல்லாமே மாறிவிடும்.

பொதுவா தாங்க முடியாத ஏமாற்றம் எதனால் நமக்கு ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா..? உங்களுக்கும் தெரியும்.. ஆனால் அதை நினைத்து தான் பார்க்க மாட்டோம். பிறருக்கு நாம் அறிவுரை கூறுவோம். ஆனால் நமக்கு எடுத்துக் கொள்ள மாட்டோம். நாம் ஒருவரை அளவுக்கு அதிகமாக நம்புவோம். அது காதலர்களாக இருக்கலாம், அல்லது நண்பர்களாக இருக்கலாம், உறவினர்களாக இருக்கலாம், உடன் பிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுடைய மாற்றத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஏமாந்து போய்விடுகிறோம்.

யார் மீதும் அளவுக்கு அதிகமாக நம்மளுடைய நம்பிக்கையை வைக்கும் போது தான் அவர்களுடைய சின்ன மாற்றமும் நம்மை பெரியதாக பாதிக்கும். தெருவில் போகும் யாரோ ஒருவர் ஒரு செயலை செய்தால் அது நம்மை பெரியதாக பாதிக்காது. ஆனால் நம் கூடவே இருப்பவர்கள் நமக்கு பிடித்தவர்கள் நம்மைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் தான் நம்மால் தாங்க முடியாது. எப்படி இவரா இருந்துட்டு இப்படி சொல்லிட்டாங்களே என்றுதானே நாம் யோசித்துக் கொண்டிருப்போம்.

அதே நேரத்தில் நாம் அவர்களுடைய இடத்திலும் இருந்து யோசித்துப் பார்க்க வேண்டும். சிலருடைய தெரியாமையாலும் சில அலட்சியத்தாலும் கூட ஏதாவது தவறு செய்திருக்கலாம். அதை நாம் மன்னித்து விடலாம். ஆனால் நம்மை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவர்களை கண்டிப்பாக நீங்கள் புறம் தள்ளி விட வேண்டும். அவர்கள் மீது நான் வைத்த நம்பிக்கை இப்படி ஆகிவிட்டதே என்று நம்மை நாமே கோபப்பட்டு கொள்ளவே கூடாது. நல்லவேளை இப்பவாவது இவர்களுடைய புத்தி தெரிந்ததே என்று ஒதுங்கி விட வேண்டும்

இத்தனை நாட்கள் நாம் அவர்களோடு இருந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்தால் மேலும் வேதனைகள் வரும். அதனால் அந்த மாதிரி நினைவுகளை துளிகூட மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. உங்களை ஏமாற்றுகிற நபர் தான் தவறு என்றால் பிறகு எதற்கு நீங்கள் அவர்களைப் பற்றி யோசிக்கிறீர்கள்? அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கீங்க. நீங்களே நினைத்து பாருங்க, நீங்க அவங்களுக்கு நல்லது செஞ்சும் உங்களை ஏமாற்றுபவர்களை நீங்கள் எதற்காக நினைக்கணும்?

ஏமாற்றங்களால் தான் பலருக்கும் கோபங்கள் ஏற்படுகிறது. அதே கோபத்தால் தான் விரக்தி ஏற்படுகிறது. விரத்தியால் நாம் தவறான முடிவுகளை எடுக்கிறோம். அதனால் விட்டு விட்டு சென்றவர்களை நம் மனதை விட்டு தூக்கி எறிந்து விட்டு மனதிற்கு பிடித்ததை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்போம். இந்த உலகம் மிகப்பெரியது. இங்கே புதியது புதியதாக பூக்கள் போன்ற பல மனிதர்கள் நிறைந்து இருக்கிறார்கள். அவர்களில் நல்ல நட்பை மட்டும் நாம் விதைப்போம். பலன் அதற்கு விரைவில் நமக்கு கிடைக்கும்.

குறிப்பிட்ட நபர்கள் மீது நாம் அதிகமான பாசம் வைத்திருப்பதால் அவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் இல்லையே என்று நாம் பதறுகிறோம். ஆனால் அப்படி இல்லவே இல்லை. இப்போதைய சூழ்நிலையில் ஒன்று போனால் இன்னொன்று என்பதுதான் உண்மை. அது உங்களுக்கும் தெரியும். இன்று உங்களுக்கு ஒருவருடைய ஏமாற்றம் அதிகமாக வலிக்கும். ஆனால் அடுத்த நாள் அது கொஞ்சம் குறைய தொடங்கிவிடும். அதைத்தொடர்ந்து நீங்கள் பல பேரிடம் பேச பேச இதுவெல்லாம் ஒரு விஷயமா? என்று மாறிவிடும். ஆனால் இன்றைய நாளை நீங்கள் கடப்பது தான் முக்கியம்.

அதனால் நாம் நடப்பதை எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொண்டு இக்கட்டான சூழ்நிலையில் அதிலிருந்து வெளிவருவதற்கான என்ன உங்களால் செய்ய முடியுமோ அதை செய்யுங்க. அதில் மேலும் மேலும் மூழ்கிக் கிடக்க மட்டும் யோசிக்காதீங்க. நாம என்ன மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறோமோ நம்ம வாழ்க்கை அப்படியே தான் போய்கிட்டு இருக்கும்.. நாம விரக்தியில் இருக்கும் போது தோணும், இந்த வாழ்க்கை இப்படியே முடிந்து விடட்டும் என்று ஆனால் நீங்கள் ஒருவரை நேசித்தது போல உங்களை இன்னொருவர் நேசிப்பார். அது பெற்றோர்களாக இருக்கலாம், உறவினர்களாக இருக்கலாம், நண்பர்களாக கூட இருக்கலாம் அவர்களுக்கு நீங்கள் வேதனையை கொடுக்காதீர்கள்.

நண்பர்களே எல்லாமே சில காலம் தான். நான் இப்போதும் சொல்கிறேன் அனைத்து சோதனை, வேதனைகளும் சீக்கிரமே மறந்து போய்விடும். அடுத்த நாள் பார்க்கையில் நாம் இதற்காக இப்படி வேதனைப்பட்டோம் என்று நாமே சிரிக்கப் போகிறோம். அதனால் சின்ன பிரச்சனையும் தலையில் ஏற்றிக்கொண்டு அழகான வாழ்க்கையை ரசிக்காமல் இருந்து விடாதீர்கள். உங்களால் மறக்க முடியாத ஏமாற்றம் என்றால் என்னவென்று கமெண்டில் சொல்லுங்க, அது அப்படியே முடிந்து போகும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+