புதிய தொழில் தொடங்கும் MSME-களுக்கு வழிகாட்டிகள்: திட்ட அறிக்கை முதல் நிதி திரட்டுவது வரை எப்படி?
பொதுவாக பயணம் செய்ய திட்டமிடும் ஒருவர் தனது பயணத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தெளிவாக திட்டமிட்டு இருக்க வேண்டும். அப்போது தான் பயணத்தில் எந்த குழப்பமும் வராது. அப்படி இல்லாவிட்டால் பயணத்தின் பாதியில் பிரச்சனைகள் ஏற்படலாம். அதை சரி செய்து சிலர் பயணத்தை தொடரலாம். சிலர் பயணத்தையே முடித்துக் கொள்ளலாம்.
அதேபோன்று தான் புதிதாக தொழில் செய்ய வேண்டும் என நினைக்கும் ஒருவர், அதற்கான யோசனையைக் கனவாகக் காண்பது முதல், அதை எப்படி லாபகரமான நிறுவனமாக மாற்றுவது எப்படி என்பது வரையிலான அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கான திட்டமிடலும் செய்திருக்க வேண்டும். சவால்கள் வரும்போது அதை சமாளித்து முன்னேற கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே உங்களை அடுத்த கட்ட வளர்ச்சி பாதைக்கு கூட்டிச் செல்லும்.

முதல் படி என்ன?
ஒரு நிறுவனத்தை நிறுவி அதன் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதில் பல விஷயங்கள் உள்ளன. அதில் முதல் படி, நீங்கள் உற்பத்தி செய்ய திட்டமிடும் பொருளுக்கு அல்லது சேவைக்கு எந்த அளவுக்கு தேவை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பதையும், போட்டியாளர்கள் யார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சந்தையில் ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களை தாண்டி, வளர்ச்சி பாதையில் செல்லும் அளவிற்கு திட்டம் அவசியம். அப்படி இல்லையேல் அதை விடுத்து மாற்றி யோசிப்பது நல்லது.
சரியாக பதிவு செய்யுங்கள்!
ஒரு நிறுவனத்தை தொடங்கி அதை பதிவு செய்யும் போது, ஆரம்பத்தில் அது தனிநபர் நடத்தும் நிறுவனமா அல்லது கூட்டு நிறுவனமா அல்லது பிரைவேட் லிமிடெட் நிறுவனமா, எங்கு பதிவு செய்தால் என்ன சலுகை கிடைக்கும். அதை எப்படி சரியாக பதிவு செய்ய வேண்டும் என தெரிந்து கொண்டு, முறையாக பதிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு MSME-ஆக பதிவு செய்ய உதயம் போர்ட்டலில் சென்று பதிவு செய்யலாம். இதன் மூலம் சட்டரீதியான ஒரு சரியான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
திட்ட அறிக்கை
திட்ட அறிக்கை என்பது ஒரு வணிகத்தின் முழுமையான வரைபடம் ஆகும். அதாவது ஒரு வீடு கட்ட எப்படி ப்ளூ பிரிண்ட் போடுகிறோமோ அப்படி அவசியமானது. அத்தியாவசியமானதும் கூட. ஏனெனில் நிறுவனங்கள் வங்கிகளில் கடனுக்காக அணுகும்போது இது அவசியம் தேவைப்படும்.
உற்பத்தி திட்டம் மற்றும் சந்தைப்படுத்தல்
ஒரு பொருளை வெற்றிகரமாக உற்பத்தி செய்து விட்டால் மட்டும் போதாது, அதை சரியாக சந்தைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். இதில் வெற்றி கண்டு விட்டாலே அந்த நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் உற்பத்தி திட்டத்தையும் சரியாக திட்டமிடுதல் அவசியம்.
அதாவது உற்பத்தி செயல்முறை, அதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் ஆகியவற்றை சரியாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு உற்பத்தி செய்த பொருளை எங்கு, எப்படி சந்தைப்படுத்துவது என்பதையும் தெளிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
முதலீடு
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது தேவையான முதலீடுகளை செய்வதில் தான் இருக்கிறது. ஏனெனில் ஒரு நிறுவனத்திற்கான அடிப்படை இயந்திரங்கள் தொடங்கி, அதை சந்தைபடுத்தலுக்கான செலவுகள் வரையில், சம்பளம் உள்ளிட்ட அனைத்திற்கும் நிதி தேவை. ஆக தேவையான நிதியை எங்கிருந்து பெறுவது என்ற தெளிவும் இருக்க வேண்டும்.
கையில் இருந்து முதலீடு இருந்தால் பிரச்சனை இல்லை. அப்படி இல்லாத பட்சத்தில் எங்கிருந்து பெறுவது, அதற்கான வழி என்ன, அதை சலுகையில் பெற முடியுமா, அதாவது அரசின் மானிய திட்டங்கள் மூலம் பெற முடியுமா என்பது குறித்த பலவற்றையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இது குறைந்த செலவில் வருமானத்தை அதிகரிக்க உதவும்.
மத்திய மாநில அரசின் சலுகைகள்!
எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு என மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளன. குறிப்பாக கடன் உத்தரவாதம், வட்டி மானிய சலுகை, மூலதன மானிய சலுகை, வட்டி நிவாரணத் திட்டம், முத்ரா கடன்கள் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கின்றன.
தமிழ்நாடு அரசும் பல்வேறு கடன் மற்றும் மானிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணத்திற்கு தமிழ்நாடு அரசுத் திட்டங்களின் கீழ் கடன் வாங்குபவர்களுக்கு 30% வரையில் மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. மின் கட்டணத்தில் மானியம் என பல சலுகைகள் உண்டு. ஆக வணிக கடன் வாங்க திட்டமிடும் முன்பு, உங்கள் அருகில் உள்ள மாவட்ட எம்.எஸ்.எம்.இ அலுவலகத்தை நாடி, அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு பின்னர் திட்டமிடலாம்.
வெற்றிக்கான படிகள்!
ஒரு நிறுவனத்தை தொடங்கி உற்பத்தி செய்து, அதை சரியாக சந்தைப்படுத்தினால் மட்டும் போதாது. ஆரம்பம் முதலே நிதி பரிவர்த்தனைகளை சரியாக பராமரிப்பது அவசியம். இது எதிர்காலத்திற்கு தேவையான நிதி உதவியை பெற உதவும்.
உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்குங்கள். இது உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த தொழில் முனைவோர்கள் அல்லது நிறுவனங்களின் ஆலோசனைகளை பெறுவது சவால்களைச் சமாளிக்க உதவும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications