For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நில்ல தொடக்கம்- சுகி சிவம்

By Staff
Google Oneindia Tamil News

உலகத்தில் வேடிக்கையான உண்மை ஒன்று உண்டு. எதையுமே ஆரம்பம் செய்வது கொஞ்சம் சிரமம். ஆரம்பித்து விட்டால் கூட்டம் சேர்ந்து கொண்டு பிரமாதப்படுத்த பலர் தயாராக இருப்பார்கள். Starting troubleநிம் தேசிய வியாதி. ஏன்? மனித குலப் பொதுச் சிக்கல்.

ஒரு விழாமுடிந்து தேசிய கீதம் என்று அறிவித்தால் மேடையில் இருப்பவர் மக்களைப் பார்ப்பார். மக்கள் மேடையை றைப்பார்கள். அவரைப்பார் இவரைப்பார் என்று சுவரைப் பார்த்து ழிப்பார்கள். யாராவது ஜனகண என்று சத்தம் கொடுத்து ஆரம்பம் செய்தால் மண அதி என்று கூட்டத்தில் கோவிந்தா போடுவார்கள்.

எப்படித்தொடங்குவது என்ற தடுமாற்றத்தை ஒழிக்க சட்டென்று தொடங்க ஒரு நில்ல பழக்கத்தை நிமது பெயோர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

பிள்ளையாரை வணங்கி ஆரம்பம் செய் என்று பழக்கி விட்டார்கள் பல கீர்த்தனைகள் தெந்த பாகவதர்கள் கூட எதைப் பாடுவது என்று சங்கடப்படாமல் வாதாபி கணபதி என்று ஆரம்பித்து மற்றவர்களைத்தான் சங்கடப்படுத்துவார்கள்.

இரண்டு மனிதர்கள் சந்தித்தால் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பதென்று தடுமாற வேண்டாதபடி செளக்கியமா ? என்ற கேள்வியைக் கண்டுபிடித்தாரே அந்த மனிதர் வாயில் அரைகிலோ சர்ககரை போட வேண்டும். அடடா அவருக்கு சர்க்கரை வியாதி இல்லாத செளக்கியம் இருக்க வேண்டும்.

இந்த செளக்கியமா என்ற கேள்வி மாதிதான் பிள்ளையார் வணக்கம். கலைகளை, திறமையை, ஆற்றலை வளர்க்கும் நில்ல தொடக்கம் பிள்ளையார் வணக்கம்.

உலக மகா எழுத்தாளர் ஒருவர் இருந்தார். நான் எழுதியதை எவன் படிக்கப்போகிறான்? என்ன ராயல்டி வரும் என்பன போன்ற கவலையே இல்லாமல் மனுசன் எழுது எழுது என்று எழுதிக் குவித்தார்.

புனைப்பெயர் டெக்னிக் வராத காலத்திலேயே எழுத்தாளன் (எழுத்தை ஆள்பவன்) என்ற புனைப்பெயர் பெற்றவர் அவர். எழுத்தாளன் என்றாலே அவர்தான் வியாசர்.

அவருக்கு ஒரு பிரச்சனை.பிரச்சனைகள் இருந்தால்தானே பெய மனிதர் என்று அர்த்தம். அவர் சொல்லும் வேகத்தில் எழுதி டிக்க ஆள் கிடைக்காத அவஸ்தை. அதாவது நில்ல ஸ்டெனோ கிடைக்காத பிரச்சனை. இப்போது பலருக்கு ஸ்டெனோ தான் பிரச்சனை..

வாழ்க்கைப் பிரச்சனை தீர வழிகாட்டும் இலக்கியத்தை எழுத நனைத்த வியாசருக்கே எழுதுவதில் பிரச்சனை. டாக்டருக்கே இருமல். அம்மா கையால் ஒரு தம்ளர் சுக்குக் கஷாயம் சாப்பிடும் பிரபல டாக்டரை போல நில்ல நிண்பர் நாரதடம் பிரச்சனை தீர வழி கேட்டார் வியாசர். வழி சொல்பவர்களும் வழி கேட்க வேண்டி வரும். வாழ்க்கை அவ்வளவு பெசு.

பிள்ளையாரைப் பிடித்தால் பிரச்சனை தீரும் என்ற நாரத னிவன் நில்ல யோசனை மகஷிக்கு மகிழ்ச்சி தந்தது. பிள்ளையாரை பிடித்து சொல்லும் வேகத்தில் எழுதுங்கள் சாமி என்றார். அவரோ நான் எழுதும் வேகத்தில் சொல்ல டியுமா? என்று திருப்பிக் கேட்டார்.

பிரச்சனையின் விளிம்பில் புதிய பிரச்சனை. அதுதானே வாழ்க்கை? சோதனைகள் வந்து ஜெயிப்பதுதான் வெற்றி. எழுதுகிற வேகத்தில் சொல்ல வேண்டுமா? சொல்லுகிறேன் எழுதும் என்றார்.

எப்படி டியும் ? விநாயகர் கேட்டார்.

உங்கள் அருள் இருப்பதால் டியும் என்றார் வியாசர். விநாயகர் சித்து விட்டார். சின்னசின்ன கண்கள் குவிய பெத்தம் பெய வயிறு குலுங்க ஓ! அது எத்தனை அழகு..!

கஷ்டம் வந்தால் புலம்பாதீர்கள். அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று துக்க திட்சை கொடுத்த உலகை இருட்டாக்காதீர்கள். மனித யற்சியும் கடவுள் கருணையும் இணைந்தால் ஆஹா! அதுதான் அழகு.

மனிதன் இட்ட பணியைக் கடவுள் செய்கிறார். மக்கள் பணியே மகேசன் பணி. ஊருக்கு உழைப்பவனுக்கு ஒத்துழைக்க வேண்டியது கடவுளின் கட்டாயம். கடவுள் நில்லவர்களின் வேலைக்காரன்.

அடடா! அவர்தானே தலைவனே இல்லாத தலைவன். நாயக்-தலைமை, வி-இல்லாமை. விநாயகர் தலைவர் இல்லாதவர். தலைவர் இல்லாத தலைவர் . தொண்டர்களின் வேலைக்காரர்.

அது இன்னொரு சூட்சுமம். ஆனையாக இருப்பவர் பிள்ளையார். ஆனால் யானையை அடக்கும் அங்குசம் அவர் கையில். என்ன அர்த்தம்? தட்டிக் கேட்க ஆள் இல்லாத தலைவர்கள் தங்களைத் தாங்களே அடக்கிக் கொள்ள வேண்டும். இதையே இன்னொரு விதமாகச் சொல்கையில் எவன் தன்னைத் தானே அடக்கிக் கொள்கிறானோ அவன்தான் பெய தலைவன்.

எப்படியோ நிமது பெய தலைவர் பெய உடம்பை வளைத்து குழைத்து ஜம்மென்று வியாசர் எதில் உட்கார்ந்தார்.

உம் சொல்லலாம் என்பதற்கு அடையாளமாய் தலையை ஆட்டினார்.

இரண்டு தந்தங்களும் பளீர் பளீர் என்று மின்னின. வியாசர் அந்த வெள்ளை தந்தங்களின் வசீகரத்தில் ஈடுபட்டு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்தார்.

அடுத்த வினாடி படீர் என்று ஒரு சப்தம். பளீரென்று மின்னிய தந்தத்தில் ஒன்று பிள்ளையார் கையில்.

சுவாமி இது என்ன? அழகான தந்தம் ..உடைத்து ளியாக்கி விட்டீர்களே? பதறினார் வியாசர்.

அழகு என்பது பார்த்து ரசிப்பதற்கு மட்டுமா? பயன்படவேண்டாமா? கண்ணுக்கு அழகாய் இருக்க எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். கருத்துக்கு அழகாய் இருக்க வேண்டாமா? இதுதான் என் எழுத்தாணி என்றார் கணபதி.

எத்தனை பெய கொள்கை. ?Utility- Beauty என்ற இரண்டில் எது பெயது? என்றால் Utility is the best beauty என்றபடி வாழ்க்கை பிறருக்கு பயன்படவே என்பது பிள்ளையாசம்.

அழகாய் இருக்க ஆசைப்படு. அழகை இழந்தாவது அடுத்தவருக்குப் பயன்படு. வியாசன் உதவியாளர் வேக வேகமாய் எழுதுகிறார். வியாசர் கடினமான ஸ்லோகங்களைச் சொல்லும் போது புந்து கொள்ள விநாயகர் யோசித்தார் என்றும் அப்போது வியாசர் மேலும் பல சுலோகங்களை மனதில் எழுதிக் கொண்டார் என்றும் கதை சொல்லுவார்கள்.

அவர்களோடு சண்டைக்குப் போனார் அருணகிநாதர். என்ன அநயாயம் ? ழுதல் கடவுள் விநாயகர், வியாசர் சொன்ன பிறகா எழுத வேண்டும்? ன்கூட்டியே என்ன சொல்லப் போகிறார் என்று யூகித்து எழுதிவிட மாட்டாரா? என்று நனைத்தார்.

வியாசர் சொல்லுன்பே என்ன சொல்லப்போகிறார் என்று யூகித்து ற்பட எழுதினார் என்ற பொருளில்

முத்தமிழ டைவினை ற்படு கிதனில்

ற்பட எழுதிய தல்வோனே (கைத்தலம் நறைகனி)

என்று திருப்புகழ் பாடினார்.

போட்டாரே ஒரு போடு. முத்தமிழ் அடைவினை மகாபாரதக் கதையினை; முற்படு கிதனில் மேரு மலைமீது; முற்பட எழுதிய ன்கூட்டியே அதாவது வியாசர் சொல்லுன்பே எழுதிய; முதல்வோனே விநாயகனே என்றார்.

யார் தலைவனுக்குத் தலைவனோ அவன்தான் தொண்டருக்குத் தொண்டன். கஷ்டம் வந்தால் புலம்ப வேண்டாம். கை கொடுக்கக் கடவுள் உண்டு. மனிதன் கடவுளுக்காகவா? இல்லை கடவுள் மனிதனுக்காக.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X