தமிழகத்தில் இன்று
மே 10-ல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சைக்கிள் பேரணி - ஜெ. அறிவிப்பு
சென்னை:
மத்திய மாநில அரசுகளை கண்டித்து 10ம் தேதி அதிமுக சார்பில் சைக்கிள் பேரணி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய் கிழமை சென்னையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசும், மாநிலத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் செய்து வரும் மக்கள் விரோதசெயல்களை கண்டித்து 10ம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு கண்டன சைக்கிள் பேரணி நடைபெறும்.
தமிழகம் முழுவதும் மாநகர பகுதிகளிலும், ஒன்றிய, நகரங்களிலும் இப்பேரணி நடைபெறும். மத்திய அரசும், மாநில அரசும் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய்,சமையல் எரிவாயு, உரம் ஆகியவற்றிற்கான மானியங்களைக் குறைத்து விலைகளை உயர்த்தியுள்ளது.
இதனால் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கைவிட வேண்டும் என்று கண்டனக்குரல் எழுப்பியும், பிரதமர் வாஜ்பாய் அதற்கு செவி சாய்க்காமல் அலட்சியமாக இருக்கிறார். இந்த விலை உயர்வை தமிழக முதல்வர் கருணாநிதிஆதரிப்பதோடு, மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு துணையாகவும் இருக்கிறார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டகருணாநிதி தவறினார். 69 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கான 33 இட ஒதுக்கீடு,அரசு சிமன்ட் ஆலை தனியாருக்கு விற்க முயற்சி போன்ற பிரச்னைகளை கண்டித்தும்இப்பேரணி நடைபெறுகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications