
தமிழகத்தில் இன்று
சென்னை:
சந்தேகத்திற்கு வயது வரம்பே கிடையாது என்பதை சென்னையில் நடந்த ஒரு சம்பவம் உணர்த்தியுள்ளது.
65 வயது காதலியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட 60 வயது காதலன், காதலியை குத்திக் கொலை செய்ததாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுச் செய்தியாக பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த இதுபோன்ற சம்பவங்கள், தமிழகத்திலும்நடக்கத் துவங்கி விட்டது என்பதற்கு எடுத்துக் காட்டாக இது அமைந்துள்ளது என்கின்றனர் சென்னை போலீசார்.
சம்பவம் பற்றி போலீஸார் கூறிய தகவல்கள் வருமாறு:
சென்னை அண்ணாசாலை பைகிராப்ட்ஸ் சாலையில் வசிப்பவர் லோகன். 60 வயதான இவர், அப்பகுதியில் உள்ளநாகம்மாள் என்ற 65 வயது பெண்மணியுடன் பழகினார். இருவரும் ஏற்கனவே திருமணமானவர்கள்.குழந்தைகளும் உள்ளனர்.
அதையெல்லாம் மறந்து இளம் காதலர்கள் போல் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்தனர். சம்பவத்தன்று நாகம்மாளைதேடி லோகன்சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவருக்கு ஆத்திரத்தை வரவழைத்தது. நாகம்மாள் வேறு ஒருநபருடன் பேசிக் கொண்டிருந்தார். வந்த வேகத்தில் திரும்பிய லோகன், அந்த சோகத்தில் குடித்தார்.
குடிபோதையில் நாகம்மாளிடம் சென்று வாக்குவாதம் செய்தார். ""நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். வேறு யாரிடம்பேசக் கூடாது என்ற கண்டித்தார்.
இதற்கு நாகம்மாளும் எதிர் வாதம் செய்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. கோபத்தின்உச்சத்திற்கு சென்ற லோகன், நாகம்மாளை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த நாகம்மாள் அரசு மருத்துவமனையில் இறந்தார். கொலை தொடர்பாக லோகனை போலீசார்கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரும் கைதானார்.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்