For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
அந்த ஆட்சியையும் பாருங்கள்,
இந்த ஆட்சியையும் பாருங்கள்: கருணாநிதி

சென்னை:

""அந்த ஆட்சியையும் பாருங்கள்; இந்த ஆட்சியையும் பாருங்கள் என்று அதிமுக ஆட்சியுடன் திமுக ஆட்சியை ஒப்பிட்டு முதல்வர் கருணாநிதி பேசினார்.""அந்த ஆட்சியில் "வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு ராமசந்திரா மருத்துவக் கல்லூரியை தனியாருக்கு தந்தனர். ஆனால், இந்த ஆட்சியில் அரசு நிலத்தைஅரசுக்கு சொந்தமாக்கிட போராடுகிறோம் என்று எடுத்துக்காட்டுடன் விளக்கம் அளித்தார்.

சட்டசபையில் நேற்று முதல்வரின் பொறுப்பில் உள்ள வணிகவரி மற்றும் மாவட்ட நிர்வாகம் பற்றிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.அந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினர் சுந்தரம் பேசினார்.

அவர் பேசுகையில், "" மாவட்ட நிர்வாகம் முதல்வரின் கையை விட்டுப் போய் விட்டது. அதற்கு எடுத்துக் காட்டு தான் சேலம் மாவட்ட வருவாய் அதிகாரிமாற்றல் ரத்து உத்தரவு. சேலம் மாவட்ட வருவாய் அதிகாரியாக உள்ள நடராஜனை இரண்டு முறை அரசு பணி மாற்றம் செய்துள்ளது.

ஆளும் கட்சிக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்பட்டுள்ளது.

சேலம் பகுதியில் அச்சுவாணி ஏரி ஒன்று உள்ளது. அந்த நிலத்தை அபகரிக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. தனியாரிடம் இருந்து அதை மீட்பதுபோல் வேஷம் போடப்படுகிறது என்று புகார் கூறினார்.

இதற்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற முறையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எழுந்து விளக்கம் அளித்தார். ""அந்த நிலத்தை அபகரிப்பதற்காகதான் டி.ஆர்.ஓ., பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது போல் சுந்தரம் குற்றம் சாட்டுகிறார். அது உண்மையல்ல. அதை அவர் நிரூபிக்கத் தயாரா? அப்பகுதியில்ஒரு நாளிதழ் இதுபற்றிய செய்தி வெளியிட்டதும், அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

அந்த நிலம் 1950ம் ஆண்டுக்கு பின்னர் இனாம்தார் வசம் இருந்தது. அப்போது அதை பச்சையப்பன் என்பவர் குதிரை லாயம் கட்டுவதற்காக வெள்ளைத்தாளில் எழுதி வாங்கியுள்ளார். அந்த காலத்தில் வெள்ளைத் தாளில் எழுதி வாங்கினாலே சர்வே செய்யப்படும்.

ஆனால், அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. 1983ல் எம்ஜிஆர் ஆட்சி இருந்தபோது அந்த நிலத்தில் பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால்,பணம் ஒதுக்கப்படவில்லை. 89ல் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதில் 5 ஏக்கர் நலத்தில் புறநகர் பஸ்நிலையம் கட்டப்பட்டது.

மீதள்ள 4.99 ஏக்கர் நிலத்தில் நகர பேரூந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தை பச்சையப்பன் என்பவர் சொந்தம் கொண்டாடிவருகிறார். அவருக்கு ஆதரவாக கடந்த ஆட்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஆதரவாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில்பச்சையப்பன் வழக்குத் தொடர்ந்து, அதில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு பெறப்பட்டதும், அதை எதிர்த்து அரசு சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. ஆனால்,அதிமுக ஆட்சியில் அந்த தீர்ப்புக்கு எதிராக அரசு சார்பில் வழக்கு போடக் கூடாது என்று வாய்மொழியாக அமைச்சர்கள் உத்தரவு போட்டுள்ளனர் என்றுஅமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் விளக்கம் அளித்தார்.

உடனே சுந்தரம் குறுக்கிட்டு, ""இதேபோன்ற ஒரு வாய்மொழி உத்தரவை நீங்களும் போட்டுள்ளீர்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன் என்றார். சுந்தரம்இப்படி சொன்னதும், அமைச்சர் அதை ஆவேசமாக மறுத்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் பலமானது. ஆவேசமாக பேசிக் கொள்ளத் துவங்கினர்.உடனே அமைச்சர் கோ.சி.மணி தலையிட்டு அமைச்சரை அமைதிப்படுத்தினார்.

சபையில் ஏற்பட்ட இந்த திடீர் சலசலப்புக்கு இடையில் முதல்வர் கருணாநிதி எழுந்துப் பேசினார். அவர் பேசியதாவது:

அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. அதை பச்சையப்பனுக்கு தந்து விட வேண்டும் என்பதற்காக வேஷம் போடுவதாக பேசுவது தவறு. அப்படி தந்து விடவேண்டும் என்று எண்ணியவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். 1989 முதல் இப்பிரச்னையை நான் கவனித்து வருகிறேன். இந்த நலம் தொடர்பானவழக்கில் அரசுக்கு எதிரான தீர்ப்பு வந்தவுடன், அரசு சார்பில் அப்பீல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஆனால், அதே போல் ஒரு உத்தரவு அரசுக்கு எதிராக வந்ததும் அதை எதிர்த்து வழக்கு போடாமல், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி ராமச்சந்திராமருத்துவக் கல்லூரியை தனியாருக்கு கொடுத்து எந்த அரசு என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

89ல் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ராமசந்திரா மருத்துவக் கல்லூரியை அரசுடைமையாக்கி உத்தரவு போட்டோம். அக்கல்லூரி நிர்வாகக் குழுஉறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 91ல் ஆட்சி மாறியதும், அக்கல்லூரி நி ர்வாகத்தினர்உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சாதகமான தீர்ப்பை பெற்றனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அப்போதைய ஆட்சியின் அமைச்சரவை கூடி அக்கல்லூரியை தனியாருக்கே கொடுப்பது என்று வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு உத்தரவு போட்டனர். ஆனால், இந்த ஆட்சியில் அரசுக்கு எதிரான தீர்ப்பு வந்தவுடன் அதை எதிர்த்து மேல் நீதிமன்றம் சென்றுள்ளோம்.

ஒரு பழமொழி உண்டு. அந்த படத்தையும் பாருங்கள்; இந்த படத்தையும் பாருங்கள் என்று. அதேபோல் அந்த ஆட்சியையும் பாருங்கள்; இந்த ஆட்சியையும்பாருங்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X