
தமிழகத்தில் இன்று
டெல்லி:
கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி நடந்த விமானக் கடத்தலுக்குப்பின் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நேபால் செல்லும் இந்தியன்ஏர்லைன்ஸ்விமானம் வரும் ஜூன் 1 ம் தேதி முதல் மீண்டும் இயங்கும் என்று விமானத்துறை அமைச்சர் சரத் யாதவ் கூறினார்.
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சி.பிரசாத் பாஸ்டோலா விடம் பேசிபின் அவர் இதை நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இதுகுறித்து இருக்கும் பிரச்சனையைத் தீர்த்து விட்டு விமான நிலையங்களில்பாதுகாப்பைப் பலப்படுத்தி மீண்டும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கலாம் என்று பாஸ்டோலா இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் தெரிவித்தார். மேலும் இதனால் இரண்டு நாடுகளுக்கும்இடையே நல்லுறவு வளரும் என்றும் அவர் கூறினார்.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் நேபாளத்தில் சுற்றுலாப்பயணிகளின் வரவு 7சதவீதம் குறைந்துள்ளது.
காட்மாண்டு விமானநிலையத்தில் இருக்கும் பாதுகாப்புகள் குறித்துக் கூறுகையில் நாங்கள் அங்கே பாதுகாப்பைபலப்படுத்தியுள்ளோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
யு.என்.ஐ.