தமிழகத்தில் இன்று
சென்னை:
எதிலும் போட்டிபோடும் திமுக, அதிமுக இரு கட்சிகளும் கடந்த வாரம் போட்டிபோட்டு இணைப்பு விழாக்கள் நடத்தி தங்களதுபோட்டி அரசியலை வெளிப்படுத்தின.
தம்மால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட ரகுபதி, கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் ஆதரவாளர்கள் ஐயாயிரம் பேருடன் திமுகவில்இணைந்த விழா மே 3ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
அதற்கு அடுத்த நாள் மே4ம் தேதி திமுக, மதிமுக, பாமகவில் இருந்து விலகியவர்கள் 3500 பேர் அதிமுகவில் இணையும் விழாஅதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
அடுத்தடுத்து நடந்த இவ்விரு இணைப்பு விழாக்களும் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள போட்டி அரசியலைவெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சியை விட்டு ஜெயலலிதாவால்வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி, கருப்பசாமி பாண்டியன் இருவரும், தங்கள் மாவட்ட ஆதரவாளர்களுடன்திமுகவில் இணைய தீர்மானித்தனர்.
இதற்கான இணைப்பு விழா மே 3ம் தேதி நடைபெறும் என்று முன் கூட்டியே அறிவித்தனர். இந்த தகவல் வெளியானதும் அதிமுகதலைமை சுறுசுறுப்படைந்தது. தமது கட்சியை சேர்ந்தவர்கள் ஆயிரக் கணக்கில் ஆளும் கட்சியில் இணைவதை போல்,அங்கிருந்து விலகியவர்கள் ஆயிரக் கணக்கில் தமது கட்சியில் இணையும் விழாவை அடுத்த நாளே நடத்தியாக வேண்டும் என்றுதீர்மானித்தார் ஜெயலலிதா.
அதற்கான உத்தரவுகள் கட்சியில் எல்லா மட்டத்திற்கும் பறந்தன. அதையடுத்து ஆங்காங்கே உள்ள ஆளும் கட்சியினர் மற்றும்அவர்களது கூட்டணிக் கட்சியினர் திரட்டப்பட்டனர். ரஜினி, சரத்குமார் மன்றத்தினரையும் கூட அதிமுக நிர்வாகிகள் விட்டுவைக்கவில்லை. அப்படி திரட்டியதில் 3500 பேர் கிடைத்தனர்.
அவர்களை எல்லாம் அழைத்து சென்னையில் அடுத்த நாளே இணைப்பு விழாவையும் நடத்தி காட்டினார் ஜெயலலிதா. திமுகவில்ரகுபதி, கருப்பசாமிபாண்டியன் இணைந்த விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, ""அதிமு என்ற தோட்டத்தில் இருந்து வெட்டிஎறியப்பட்ட வேர்களை நான் எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்கி றன். எனவே அதிமுகவினர் அனைவரும் திமுகவில் வந்துசேர வேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்தார்.
அதை அடுத்த நாள் அதிக அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவில் ஜெயலலிதா கிண்டலடித்தார். இவ்விழாவில் அவர்சுவையான தோட்டக் கதை ஒன்றையும் கூறி முதல்வர் கருணாநிதியை விமர்சித்தார். ஜெயலலிதா பேசியதாவது:
அதிமுக கோடிக் கணக்கான வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கும் வண்ணத் தோட்டம். அதில் சுவையான காய் கனிகள், மலர்களும்தரும் மரங்கள் ஏராளம். ஆனால், நமக்கு நேர்மாறாக இன்னொரு தோட்டம் இருக்கிறது. அங்கு மரங்கள் பூப்பதில்லை.காய்ப்பதில்லை.
அதனால் நம்டைய தோட்டத்தைப் பார்த்து, அந்த தோட்டக்காரர் ஏக்கப்படுகிறார். நம்முடைய தோட்டத்தில் உள்ள மாம்பழங்கள்கிடைக்காதா என்று பெருமூச்சு விடுகிறார்.
இந்த தோட்டத்தில் இருந்து வெட்டித் தூக்கி எறியப்பட்டவைகளை அவர் எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார். நன்றாக பழுத்தபழங்களை ஒரு கூடையில் வைத்திருந்தேன். அதில் மூன்று பழங்கள் அழுகிப் போய் விட்டன. அந்த பழங்களால் நல்ல நிலையில்உள்ள பழங்களும் அழுகும் நிலை. எனவே அவைகளை தூக்கி எறிந்தேன். அதை கையில் எடுத்துக் கொண்டு அவர் விழாநடத்துகிறார் என்றார்.