தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil
இலங்கைப் பிரச்சனை: மத்திய அரசு எடுத்த முடிவு சரியே -மூப்பனார்

சென்னை:

இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது. தமிழ் ஈழத்தை ஆதரிக்க மாட்டோம் என்றுமத்திய அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்று த.மா.க. தலைவர் மூப்பனார் பாராட்டு தெரிவித்தார்.

சென்னையில் சனிக்கிழமை த.மா.க. தலைவர் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மதசார்பற்ற அணிகளை ஒன்று திரட்டும் முயற்சி நடக்கிறது. இதற்காக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்கிறஆர்வம் எல்லா தலைவர்களிடமும் முன்பை காட்டிலும் அதிகமாக உள்ளது.

அனைவரும் ஒன்று கூடி, அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம். தமிழகத்தில்கூட்டணி ஆட்சி அமையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிலிதா கூறியிருப்பதன் மூலம்,மதச்சார்பற்ற அணி அமைவதற்கான முயற்சியில் இடையூறு ஏற்படுமா, ஏற்படாதா என்பது குறித்து எதுவும்சொல்வதற்கு இல்லை.

கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் தான் விவாதிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பது வேறு.புலிகளை ஆதரிப்பது வேறு.

இலங்கைத் தமிழர்களை புலிகள்தான் காப்பாற்றுகின்றனர் என்று கூறுவது சரியல்ல.

விடுதலைப் புலிகள் கை ஓங்கியிருக்கும் போது, தமிழர்கள் அங்கியிருந்து அகதிகளாக இங்கு வருவதுஅதிகரித்துள்ளது.இவ்வாறு மூப்பனார் கூறினார்.

யு.என்.ஐ.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற