செயலை விட அதன் பயனை நேசித்தால்!
செயலின் பயனில் ஆர்வம் செலுத்துவோரைவிட செயலில் ஆர்வம் காட்டுபவரைக் கீதை கொண்டாடுகிறது.
அதன் அவசியத்தையும் நியாயத்தையும் கொஞ்சம் கவனிப்போம்.
இரண்டு விவசாயிகள். ஒருவர் கர்மயோகி. மற்றொருவர் சராசரி. லாபத்தைக் குறிக்கோளாக உடைய சராசரிவிவசாயி, கரும்பு பயிரிடுவதை விட்டு கஞ்சா பயிரிட்டால் காசு கூட கிடைக்கும் என்றால், பயன் மீதுள்ள பற்றால்கஞ்சா பயிரிடுவார். கர்மயோகி அப்படிச் செய்வாரா? மாட்டார்.
உழைப்பே அவரது தவம்; உழவே அவரது ஜபம். வேள்வியில் இருந்து பிரிக்க முடியாத அக்கினி போல விவசாயபூமியில் இருந்து விலக்க முடியாதவர் அவர். உழைக்காமல் வரும் காசு அவருக்கு அருவருப்பு தரும். கரன்சிகாகிதங்களை மட்டுமே தின்னும் பணப்பசி அவருக்கு இல்லை.
அந்த விவசாய கர்ம யோகியின் சாம்ராஜ்யம் விசாலமானது. கலப்பையும் கையுமாக அவர் களத்தில் இறங்கும்போது காலைக்கதிரவன் அவரைக் கைகூப்பி வரவேற்கிறான்.
வளைந்து நிற்கும் தொடுவானம் அந்த விவசாயிக்கான வரவேற்பு வளையம்.
இவரது கம்பீரத்தில் கால் பங்காவது கஞ்சா பயிரிடுபவன் அனுபவித்தது உண்டா?
தேசத்ததின் தேவையை, நெல்லாலும் கோதுமையாலும் நிரப்பும் கடமை உணர்வு மிக்க விவசாயிகள் -கர்மயோகிகள். பாரத மாதாவின் தவப் புதல்வர்கள்.
செயலின் பயன் எப்படியும் நம்மை வந்தடையும். அதன் எதிர்பார்ப்பு செயலின் சுவையை இன்பத்தைகொன்றுவிடும்.
ஆசார்ய வினோபாபாவே எளிமையாக இதை விளக்குகிறார். ""குழந்தை விளையாடுகிறது. அது விளையாடுவதில்உள்ள இன்பத்திற்காகவே விளையாடுகிறது. இதனால் அதற்கு உடற்பயிற்சியின் பயன் தானே கிடைகிறது. ஆனால்அப்பயனிடத்தில் அதற்குக் கவனம் இருப்பதில்லை. அதற்கு இன்பம் முழுவதும் விளையாட்டிலேதான்.
மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது கீதை. செயலைச் செய்துவிட்டு பயனைக் கருதாமல் இருப்பதுசத்வகுணம்.
பயனை விடுவது என்றால் செயலையும் விடுவோம்...செய்ய மாட்டோம் என்று சோம்பிக் கிடப்பது தமோ குணம்.
செயலையும் விட முடியாது. . பயனையும் விட முடியாது... நான் ஏன் பயனை விடவேண்டும் என்று போராடுவதுரஜோ குணம். பயனில் பற்றின்றி செயலில் கவனம் செலுத்திய காந்தியடிகள் போன்ற ஆன்ம ஞானிகள் கீதையின்புத்திரர்கள்.
உலக வரலாறு படித்தவர்கள் ஓர் உண்மை அறிவார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications