கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவத் தயார்- டால்மியா அறிவிப்பு
புது தில்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது கூறப்படும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்துவரும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) உதவத் தயார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர்ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரிகள்சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சமீபகாலமாக பலவகையான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.இதையடுத்து இக் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மீது குற்றம் சாட்டிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமுன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா, சில நாட்களுக்கு முன் சிபிஐ அலுவலகத்துக்கு நேரில் சென்று 360 பக்கஅறிக்கையைச் சமர்ப்பித்தார். இது தொடர்பாக, அவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. கிரிக்கெட்சூதாட்டம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை 4 பேரிடம் சிபிஐ விசாரித்துள்ளது.
இந் நிலையில், சிபிஐ விசாரணைக்கு முழு அளவில் உதவத் தயாராக இருப்பதாக ஜக்மோகன் டால்மியாஅறிவித்துள்ளார். குற்றச்சாட்டுகள் குறித்து என்னிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த அவர்களுக்கு உரிமைஉள்ளது. அவர்கள் விரும்பினால், என்னிடம் விசாரணை நடத்தலாம்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் குரோனியே மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தென்ஆப்பிரிக்க விசாரணைக் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் குறுக்கிட சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் விரும்பவில்லை. அதேபோல், இந்தியாவில் சிபிஐ நடத்தும் விசாரணையில் தலையிடவும்விரும்பவில்லை. இரு நாட்டு விசாரணை அமைப்புகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தகிரிக்கெட் கவுன்சில் எப்போதும் தயாராக உள்ளது.
தென் ஆப்பிரிக்க விசாரணைக் கமிஷன் தனது இடைக்கால விசாரணை அறிக்கையை மே 31-ம் தேதி கவுன்சிலிடம்சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் டால்மியா.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!