முகத்தில் தெளித்த சாரல்...
சென்னை:
திருக்குறளை உயர்த்திப் பேசுவதற்காக பகவத் கீதையை குறைத்துப் பேசி தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியுள்ள தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன்மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முனன்ணி அமைப்பின் தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கல்வி அமைச்சராக உள்ள பேராசிரியர் அன்பழகன், திருக்குறளின் பெருமையை பகவத் கீதை விழுங்கி விட்டதாக பேசியுள்ளார். தெய்வநாயகம் என்றகிறிஸ்தவ பிரசாரகரின் நிகழ்ச்சியொன்றில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
திருக்குறள், திருமூலர் அருளிய திருமந்திரம், சைவசித்தாந்தம் ஆகிய நூல்கள், பைபிளில் இருந்துதான் உருவானவை என்று தேவையற்ற ஆராய்ச்சியை இவர்மேற்கொண்டு வருகிறார். இவரது ஆராய்ச்சி வெறும் பிதற்றல் என்பது அறிவுடையவர்களுக்குப் புரியும்.
திருக்குறளின் பெருமையை, கீதை விழுங்கி விட்டதாக கூறுவது அபத்தமான, உண்மையற்ற வாதம். ஒரு நூலின் பெருமையை எப்படி இன்னொரு நூல் விழுங்கமுடியும். குறளின் பெருமையை யாராலும், எந்தப் புத்தகத்தாலும் குறைத்து விட முடியாது.
குறளை சரியான முறையில் பிரபலப்படுத்தாதது நமது குறை. அதை மறைக்க கீதையைப் பழிப்பது தவறானதாகும். இதேபோல, கீதையை மறுக்கதமிழர்கள் மறுக்கும் நாளில்தான், திராவிட சமுதாயம் எழுச்சி பெறும் என்றும் அன்பழகன் கூறியுள்ளார். இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்களைஅன்பழகன் போன்ற பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
கல்வி அமைச்சரின் கருத்துக்களுக்கு முதல்வர் கருணாநிதி சரியான விளக்கம் பெற்று பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.