For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

- ஹேமங் பதானி

By Staff
Google Oneindia Tamil News

கே: இந்திய சுதந்திர போராட்டத்தையும், தனி ஈழ விடுதலைப் போரா-டத்தையும் ஒன்றாகப்பேசுகிறார்களே?

ப: பயிர்த் தொழிலையும், கசாப்புக் கடை வியாபாரத்தையும் - ஒன்றாகப் பேசுவது எவ்வளவு சரியோ, அவ்வளவு இதுவும் சரியே.

கே: நான் அழிந்தாலும், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதை விட்டுவிட மாட்டேன் என்று வைகோ கூறியுள்ளாரே?

ப: இதே வைகோதான் முன்பு ம.தி.மு.க. மாநாட்டையொட்டி , விடுதலைப் புலிகளை ஆதரிக்கிரீர்களா? என்று கேட்கப்பட்டபோது, எந்த குறிப்பிட்டஅமைப்புக்கும் ஆதரவு என்று நாங்கள் தீர்மானம் போடவில்லை - இதுதான் எங்கள் நிலை என்று பதில் சொன்னார். அப்போதுவிடுதலைப் புலிகள் கைதாழ்ந்திருந்தது. இப்போது விடுதலைப் புலிகள் கை ஒங்கியிருக்கிறது. வைகோவிற்கு வீரம் வந்துள்ளது. ஆக. இவர் அழிந்தாலும் புலி ஆதரவைவிடமாட்டார். அவர்கள் கை தாழ்ந்தால், ஆதரவைத் தள்ளி வைப்பார்.

கே: காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க, வேலை வாய்ப்பைப் பெருக்க வேண்டும் என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளதப பற்றி?

ப: வேலை வாய்ப்பு அதிகரித்தால், தீவிரவாதம் குறையும் என்று ஃபெர்னாண்டஸ் நம்புகிறார், நான் நம்பவில்லை. வேலை இல்லாத்திண்டாடம்தான் தீவிரவாதத்தை வளர்க்கிறது என்பது உண்மையானால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும்தீவிரவாதம் தலைவிரித்து ஆடியிருக்குமே? ஏன் அப்படி நிகழவில்லை?

கே:அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு,மானியக் குறைப்பு ஆதியவற்றைக் கண்டித்துகாங்கிரஸ் ஊர்வலம் நடத்தும் போது, அக் கட்சியின் மன்மோகன் சிங் மானியமாக மத்திய அரசுஆண்டுக்கு 1.30 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகிறது. இது குறைக்கப்பட வேண்டும் என்றுகூறியுள்ளாரே?

ப: மன்மோகன் சிங்கினால் வெறும் ஆர்ப்பாட்ட அரசியல் நடத்த முடியவில்லை.; போலி வாதங்கள் புரியமுடியவில்லை. ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, எதிர்க் கட்சியில் இருந்தால் அதற்கு நேர் எதிர்ப்பேச்சு என்றஇரட்டை நிலை யை எடுக்க அவரால் இயலவில்லை. இந்த மாதிரி நேர்மை, காங்கிரஸிற்கு சரிப்பட்டு வராது.மன்மோகன் சிங்கின் இடத்திற்கு . காங்கிரஸ் வேறு ஆசாமியைத் தேடத் தொடங்கும் நேரம் வந்துவிட்டது.

கே: மேலும் ஐந்து ஆண்டுகள் வாய்ப்புக் கொடுத்தால், தமிழகத்தையே சிங்கப்பூர் ஆக்கி விடுவார்கலைஞர் என்கிறாரே, அமைச்சர் பன்னீர் செல்வம்?

ப: அமைச்சர் சொல்கிற மாதிரி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க. தலைவர் சென்னையின் பெயரை மீண்டும்மாற்றி விடுவார் என்று நான் நினைக்கவில்லை.

கே: குட்டையைக் குழப்புவது; மனிதர்களைக் குழப்புவது - வித்தியாசம் என்ன?

ப: நான் பேசாமல் தேமேனென்றிருக்கிறேன்; நீங்கள் சும்மா இருக்க முடியாமல், கேள்வி கேட்டு என்னைகுழப்புகிறீர்கள் - இது குட்டையைக் குழப்புவது ,என் பதிலைப் பார்த்து நீங்கள் குழப்புகிறீர்கள் - இது மனிதனைக்குழப்புவது.

கே: பல அப்பாவித் தமிழர் தலைவர்களை கொலை செய்த எல்.டி.டி.ஈ தமிழர் நலன் காக்கும்அமைப்பாக எப்படி இருக்க முடியும்? - என்கிறாரோ முதல்வர் கருணாநிதி! இது எதைக் காட்டுகிறது?

ப: இப்படி அவர் உண்மையாகவே நினைத்தால் - அவருடைய இந்தப் பேச்சு, தமிழகத்தில் தெளிவு ஏற்பட வாய்ப்புஇன்னமும் இருக்கிறது என்பதைக் காட்டும்.

கே: இலங்கையில் நடக்கும் சண்டையைப் பற்றி அ.தி.மு.க. வினரோ, ஜெயலலிதாவோ அதிகம் கருத்துதெரிவிக்கவில்லையே...?

ப: புலிகள் யாழ்ப்பாணத்தைப் பிடித்து, தங்கள் திருப்திக்காக ஈழம் என்று அறிவித்தும் விட்டார்களானால் - அதன்பிறகு பேசிக் கொள்ளலாம் என்று ஜெயலலிதா பேசாமலிருக்கிறாரோ, என்னவோ! புலிகள் முயற்சி தோல்விஅடைந்து விட்டால், வீணாக இப்போதே அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவானேன் - என்று அவர் நினைக்கிறார்போலிருக்கிறது.

கே: ஜெயில்; ஆஸ்பத்திரி–என்ன வித்தியாசம் சார்?

ப: ஜெயிலுக்குப போனால், உங்களிடமுள்ள பணம் நஷ்டம் ஆகாது.

கே: ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றால், ஆசைக்குக் காரணம் என்ன?

ப: மனிதன் விஷயங்களைக் கருதும் போது அவற்றில் அவனுக்குப் பற்றுதல் உண்டாகிறது; பற்றுதலால்விருப்பம்(ஆசை) உண்டாகிறது; விருப்பத்தால் சினம் பிறக்கிறது; சினத்தால் மயக்கம் மயக்கத்தால் நினைவுதவறுதல் நினைவு தவறுதலால் புத்தி நாசம் புத்தி நாசத்தால் மனிதன் அழிகிறான் - என்கிறது பகவத் கீதை.

கே: கர்மமே கண்ணாயினார் என்பதற்கு இன்றைய அரசியல் தலைவர் யாரைக் கூறலாம்?

ப: பால் தாக்கரேயை சொல்லலாம்.ஏதாவது தீமை செய்து கொண்டே இருப்பது என்ற தனது கருமத்தைநிறைவேற்ற, கிடைக்கின்ற எந்த ஒரு வாய்ப்பையும் அவர் நழுவ விடுவதில்லை. இப்போது விடுதல்ைப புலிகளைஆதரித்திருக்கிறார்.

கே: புதுக் கோட்டை மாவட்டத்தில் 60 சதவீத பெண்கள் கள்ளச் சாராயத் தொழிலில்ஈடுபட்டுள்ளனாராமே! இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் மூன்றில் ஒரு ஒரு பங்கு இடங்கள் உண்மையாகவே கிடைத்துவிட்டால்,என்ன செய்வது? அதற்கு உரிய பயிற்சி பெற வேண்டாமா? அதற்காகத்தான் இப்போதே முனைகிறார்கள்

(தொடர்ச்சி 2ம் பக்கம்...)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X