For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கே: தற்போதைய நிலையில் சோனியா தலைமையில் செயல்படுவது தவிர்க்கமுடியாதது என்று ஏ.கே. அந்தோணி சொல்கிறாரே?

ப: மக்கள் ஆதரவைப் பெற முடியாவிட்டாலும், கட்சியில் மிகப் பெரும்பாலோனோரின் ஆதரவைப் பெற்று, கட்சியை சிதறவிடாமல்வைத்திருக்கக்கூடியது சோனியாவின் தலைமைதான் - என்பதே காங்கிரஸின் இன்றைய நிலைமை. ஆகையால் ஆண்டனி சொல்வதில் உண்மை இருக்கத்தான்செய்கிறது.

கே: க்ளிண்டனின் பதவிக்காலம் முடிந்தவுடன் இந்திய - அமெரிக்க உறவு எப்படி அமையும்?

ப: இந்தி - அமெரிக்க உறவு, மேலும் மேலும் சீரடைவதற்குத்தான் இப்போது வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. இந்தியாவில்எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆட்சி மாற்றங்கள் வேண்டுமானால், இந்த வாய்ப்புகளை குறைக்கலாமே தவிர, அமெரிக்காவில் ஏற்படக்கூடியஆட்சி மாற்றங்கள் இந்த வாய்ப்புகளை பாதித்துவிடும் என்று தோன்றவில்லை.

கே: மேம்பாலங்களின் மன்னன் மேயர் மு.க. ஸ்டாலின் என்று சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் எம். பாலச்சந்திரன் பேசியுள்ளாரே? ஒருகாவல்துறை உ.யர் அதிகாரி இப்படி அரசியல்வாதி போல் பேசலாமா?

ப: கூடாதுதான். காவல்துறை எந்த அளவுக்கு அரசியலாக்கப்பட்டு விட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.

கே: திராவிடக் கட்சிகளிடம் நீங்கள் காணும் ஒற்றுமை என்ன?

ப: தனி நபர் துதி, விளம்பர மோகம்.

கே: அன்றாடம் செயின் பறிப்புகள் நிகழும்போது, பெண்கள் விடாப்பிடியாக அதை அணிய வேண்டுமா?

ப: அன்றாடம் சாலை விபத்துக்கள் நடக்கும் போது, நாம் தெருவில் செல்லத்தான் வேண்டுமா?

கே: விஞ்ஞான பூர்வமான ஊழல் எது? அஞ்ஞானமய-மா-ன ஊழல் எ-து?

ப: ஊழல் பணத்தில் மனை, வீடு, எஸ்டேட் என்று தன் பெயரிலும், தன்னைச் சார்ந்தவர்கள் பெயரிலும், பதிவு செய்து வாங்குவது - அஞ்ஞான மயமானஊழல் - ஊழல் பணத்தில் இப்படிச் செய்யாமல் இருப்பது -விஞ்ஞான பூர்வமான ஊழல்.

கே: அண்ணாயிஸம் பற்றி எம்.ஜி.ஆர். விளக்கம்; காமரா-ஜர் ஆட்சி பற்றி த.மா.கா. விளக்கம் - ஒப்பிடவும்?

ப:அண்ணாயிஸம் பற்றிய எம்.-ஜி.ஆர் விளக்கம், உபநிஷத்துக்கள் போன்றது; லேசில் புரியாது. காமராஜர் ஆட்சி பற்றிய த.மா.க. வினர் விளக்கம்,புராணங்கள் போன்றது; புரியும். ஆனால் இனி நடக்காது என்பதும் தெரியும்.

கே: -பிஹார் மாநிலத்தில் 12 முதல் 14 வயது முடிய உள்ள சிறுவர்கள் சிலருக்கு, ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ளசெய்தி பற்றி...?

ப: பெரியவர்களுக்கு நிகராக நம் நாட்டில் சிறுவர்கள் முன்னேறவில்லை என்று இனிமேல் யாரும் சொல்ல முடியாது.

கே: தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்கிற விஷயம் அரசியலைப் பொறுத்தவரையில் எப்படி ஸார்?

ப: அரசியலைப் பொறுத்தவரை, வெற்றிதான் தோல்விக்கு முதல் படி.

கே; ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனத்தை சிஸ்டர் கன்சர்ன் என்று தான் அழைக்கிறோம். பிரதமர்களின் கன்சர்ன் என்று அழைப்பதில்லையே? ஏன்?

ப: சகோதர பாசத்தை, வர்த்தகம் அளவுக்கு தாழ்த்தி விட மனம் வராதவர்கள், துணை நிறுவனத்துக்கு சிஸ்டர் கன்சர்ன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.இதிலிருந்தே பிரதரின் பெருமை தெரியவில்லையா?

கே: முன்னாள் பிரதமர்கள் துவக்க முடிவு செய்துள்ள மூன்றாவது அணிக்கு. ஜோதிபாஸூ தலைமை ஏற்க உள்ளாராமே?

ப: பயப்படாதீர்கள். அப்படியெல்லாம் நடக்காமல் சுர்ஜித் சிங் பார்த்துக் கொள்வார்.

கே: முன்னாள் பிரதமர்களின் விமானக் கட்டண பாக்கி வசூல் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியானது ராஜீவ் காந்தியின் பாக்கித் தொகையாகக்கட்டிவிட்டு, நரசிம்மராவுக்கு பணம் கட்ட மெளனம் சாதிக்கிறதே? இது எதைக் காட்டுகிறது?

ப: நரசிம்மராவுக்கும், சோனியா காந்திக்கும் இடையே எழுந்த மனக் கசப்புகள் இன்னமும் தீரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இது ஒருபுறமிருக்க, இந்த பிரதமர்களின் பழைய பாக்கி விவகாரத்தை பெரிது படுத்துவதில் அர்த்தமில்லை என்று நான் நினைக்கிறேன். அரசு காரியம் அல்லாமல்,கட்சி பணி காரணமாகவோ, சொந்த வேலையாகவோ ஓர் இடத்துக்குச் செல்லும் போது கூட, பிரதமர் தனது நிர்வாகப் பணிகளையும் கவனிக்கநேரிடலாம். எந்த அளவு மற்ற வேலை - என்றெல்லாம் தீர்மானித்து, அந்த விகிதத்தில் பயணச் செலவை வசூலிக்க வேண்டும் என்று சொல்லமுடியுமா? பிரதமர்களாக வருகிறவர்களும் சரி; மற்ற அமைச்சர்களும் சரி; தாங்களாகவே இதில் எல்லாம் ஒரு நெறிமுறையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

கே: தமிழகத்தில் உள்ளவர்கள் விடுதலைப் புலிகளை வளர்த்து விடுகிறார்கள் - என்ற மூப்பனாரின் குற்றச்சாட்டு குறித்து?

ப: உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்.

இந்த கேள்வி-பதில் குறித்து உங்கள் கருத்தை அனுப்பவும்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X