தமிழகத்தில் இன்று
சீனவு-டன் நல்லுறவுக்கு பாகிஸ்தான் விவகாரத்தைக் கையில் எடுக்கிறது இந்தியா
பீஜிங்:
சீன அதிபர் ஜியாங் செமீனுடன் பேசுகையில், சீன-பாகிஸ்தான் உறவைப் பொருத்தே, இந்திய, சீன நல்லுறவு அமையும் என்பதை குடியரசுத் தலைவர்கே.ஆர்.நாராயணன் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் ஆறு நாள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், ஞாயிற்றுக்கிழமை பீஜிங் சென்றார். தனது பயணத்தின்போது இருநாடுகளுக்குமிடையிலான உறவுகள் குறித்து அதிபர் உள்பட பல்வேறு தலைவர்களுடன் அவர் பேசவுள்ளார்.
அணு ஆயுதத் தொழில்நுட்பம், ஏவுகனைத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து சீனா உதவி வருவது குறித்து சீன அதிபருடன்,கே.ஆர்.நாராயணன் பேசுவார் என்று தெரிகிறது.
சீனா, தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உதவி வருவதால், இந்தியத் துணைக் கண்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் குடியரசுத் தலைவர் நாராயணன்,சீனத் தலைவர்களுக்கு விளக்குவார்.
கடந்த எட்டு வருடங்களில் சீனாவுக்கு சென்றுள்ள முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் நாராயணன்தான். இரு நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக உறவுபலப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இரு தரப்பினருக்குமிடையே உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குடியரசுத் தலைவர்,சீன அதிபருடன் விவாதிப்பார்.
பாகிஸ்தானுடனான உறவு குறித்து இந்தியா தெரிவிக்கும் கவலைகளை சீனா எந்தளவு ஏற்றுக் கொள்ளும் எனத் தெரியவில்லை என்று கூறும்அரசியல் நிபுணர்கள், சீனாவில் முன்பு தூதராக இருந்த கே.ஆர்.நாராயணன் இப்போது குடியரசுத் தலைவர் என்ற அந்தஸ்தில் சீனா வந்திருப்பதால் இதுகுறித்துதனது பழைய செல்வாக்கைப் பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்க பத்திரிகைக்கு சீன வெளியுறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், உங்களுக்கு எப்படி இஸ்ரேலோ, அப்படியேஎங்களுக்கு பாகிஸ்தான் என்றது நினைவிருக்கலாம்.
பாகிஸ்தான் விஷயத்தை சீனாவிடம் வலியுறுத்துவதால் இந்தியாவுக்கு ஒரு பலன் கிடைக்கலாம். இந்தியாவுடன் உறவை, வலுப்படுத்துவது தொடர்பாகசீனா, சாதகமான பதிலைத் தரலாம் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.
இந்தியாவுடனான நல்லுறவுக்கு பாகிஸ்தான்தான் இடையூறா என்பது குறித்து சீனாதான் முடிவெடுக்க வேண்டும். இருப்பினும், தெற்காசியாவில்முதன்மையானதும், ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடாகவும் விளங்கும் இந்தியாவின் உறவு கண்டிப்பாக தேவை என்ற நிலையில், அதற்குச் சாதகமானவகையில் ஓரளவாவது சீனா செயல்படும் என்று நம்பலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.