For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

77 வயதில் அடியெடுத்து வைத்தார் முதல்வர் கருணாநிதி

சென்னை:

தமிழக முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை 77-வது வயதில் அடியெடுத்து வைத்தார்.

பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்தநாள் திராவிட முன்னேற்றக் கழக தலைமைஅலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும்.

இந்த முறையும் வழக்கமான உண்டியல் வசூலுடன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று கருணாநிதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துத்தெரிவித்தனர்.

77-வது பிறந்த நாளையொட்டி 7 லட்சத்து 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைஅண்ணா நினைவிடத்தில் முதல்வர் துவக்கி வைத்தார்.

சனிக்கிழமை காலை 4.20 மணிக்கு ஆலிவர் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டுப் பிறந்த நாள் கொண்டாட்டத்தை கருணாநிதி துவக்கினார். பின்னர்நேராக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அண்ணா நினைவிடம் வந்தார்.அங்கு தமிழக அரசின் வனத்துறை சார்பில் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை முதல் மரக்கன்றை நட்டுத் துவக்கி வைத்தார்.

பின்னர் தனது இல்லத்திற்குத் திரும்பி, அங்கு குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாள்கொண்டாடினார். சபாநாயகர் பி.டி.ஆர். பழனி வேல்ராஜன், அமைச்சர்கள், அரசுஅதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். அதை முடித்துக் கொண்டு சரியாக 8 மணிக்கு திமுகஅலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குத் திரும்பினார் கருணாநிதி.

முதல்வருக்கு வாழ்த்துச் சொல்ல தொண்டர்கள் வருவதற்கு கலைஞர் திருமண அரங்கில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு நிரம்பியிருந்த தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டிமுதல்வர் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

நிகழச்சி மேடையில் பிறந்த நாள் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. அதில் வசூலாகும்பணம், முதல்வரின் பொது நிதிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்சியினர் ஒவ்வொருவராக வந்து முதல்வருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சியில் மதிமுக தலைவர் வைகோ, ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி, எம்.ஜி.ஆர். அதிமுக தலைவர் திருநாவுக்கரசு, பா.ஜ.க. தலைவர்டாக்டர் கிருபாநிதி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழக காங்கிரஸ்முன்னாள் தலைவர் குமரி அனந்தன், தேசிய லீக் தலைவர் லத்தீப், தமாகா சார்பில்சுதர்சனம், முக்தா சீனிவாசன், ரங்கநாதன், நடிகர் ரஜினி காந்த் சார்பில அவரது மன்றத்தலைவர் சத்தியநாராயணா, நடிகர்கள் விஜயகாந்த், சரத் குமார், மம்முட்டி, டி.ராஜேந்தர்,நடிகை ராதிகா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

பிரதமர் வாஜ்பாய், பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் தொலைபேசியில்முதல்வருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X