தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

Rajinikanthராகவேந்திரா திருமணம் மண்டபம் கட்டியது தொடர்பாக ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனக்கு நல்லதீர்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது என்று ரஜினிகாந்த் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டியது தொடர்பாக என் மீது மனோகரன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் என் மேல் நியாயம்இருப்பதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மனோகரன் மீது மானநஷ்ட ஈடு வழக்கும், ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதற்கும், தவறான தஸ்தாவேஜூகள்காட்டியதற்கும் அவர் மேல் வழக்கு தொடரும்படி பலர் கூறினார்கள்.

ஆனால் எனக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தினார் என்பதற்காக நான் அவருக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தினால் அவருக்கும் எனக்கும் என்னவித்தியாசம்? மேலும் அது பழிவாங்கும் நடவடிக்கையாக அமைந்து விடக் கூடும்.

மனோகரன் ஏதோ ஒரு ஆசையில் எனக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்து விட்டார். ஆனால் ராகவேந்திரா திருமண மண்டபம் மேல் வழக்குஇருந்ததால்தான் அதை நான் மக்களுக்குக் கொடுத்து விட்டேன் என்று பலர் பேசினார்கள். மனோகரன் தொடுத்த வழக்கை விட இந்த வழக்குஎன்னை மிகவும் பாதித்தது.

தற்போது என் மேல் நியாயம் இருப்பதால் சரியான தீர்ப்பு கிடைத்துவிட்டது. நான் பரிபூரண மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற