For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஜெ. குற்-றச்-சாட்--டும்,"அதி-பர்" கருணாநி-தியும்

சென்னை:

தமிழ்நாட்டையும், யாழ்ப்பாணத்தையும் இணைத்து தனி ஈழம் ஏற்படுத்தி அதன்அதிபராக வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் நீண்ட நாள் ஆசை என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

மதிமுக தலைவர் வைகோ ஈரோட்டில் நடத்திய மாநாட்டு நிகழ்ச்சிகள் தேசபக்திமிக்கவர்களை திகைக்க வைத்து விட்டது. கட்டுண்டு கிடக்கும் இந்தியத் திருநாட்டைச்சிதறுண்டு போகச் செய்யும் விஷமச் செயல்கள் அல்லவா மாநாட்டில் அரங்கேறியது.இது நாடா? இங்கே நடப்பது ஆட்சியா? இல்லை கேலிக் கூத்தா? ஒன்றும்புரியவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். ராஜீவ்காந்திக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கமா? வைகோவின் சுயரூபத்தை வாஜ்பாயும், அத்வானியும் புரிந்துகொண்டார்களா இல்லையா?

தமிழ்நாட்டு பிரபாகரன் வைகோ என்று ஆவேச முழக்கங்களைச் செய்தது நியாயமா?.பிரபாகரன் படம் தாங்கிய பதாகைகளைப் பேரணியில் தாங்கி வந்தது இந்தியநாட்டுக்கு ஏற்படும் ஆபத்துக்கு அறிகுறி அல்லவா?. முழுக்க இந்திய மண்ணுக்குவிரோதமான தேசத் துரோகம் கொப்பளிக்கும் அக்கிரம மாநாட்டில் முதல்வர்கள்பங்கேற்கலாமா?. மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கலந்து கொள்ளலாமா?பொறுப்புள்ள இவர்கள் கலந்து கொண்டது ஏன்?.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு தாராளமாக ஆதரவு வழங்கும் இந்தியஅரசின் செய்கை தேசப் பக்தி உள்ளவர்களை கவலைக்கு உள்ளாக்குகிறதே,பிரிவினைவாதம் பேசுவோர்க்கு மத்திய, மாநில அரசுகளின் போக்குகையலாகாததனத்தை பிரதிபலிக்கிறது.

ஜம்முகாஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய ஒற்றுமைக்கு எதிராகத் தொடங்கிவைத்திருக்கும் விவாதம் அஸ்ஸாம், நாகாலாந்து என பரவத் துவங்கி விட்டது. ஒருநாட்டில் இரண்டு பிரதமர்கள் இருக்க முடியுமா?. ஜம்மு காஷ்மீர் சட்டசபையில்நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானம் கண்டனத்துக்குரியது.

காஷ்மீர் அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும். அங்கே ஜனாதிபதி ஆட்சியைபிரகடனம் செய்ய வேண்டும். இல்லையேல் இந்த சுயாட்சி கோரிக்கை காட்டுத் தீபோல் பரவி இந்திய நாட்டையே சிதறடித்து விடும். ஆனால் நடவடிக்கை எடுக்கபா.ஜ.க. அரசு ஏன் தயங்குகிறது.

நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. ஆட்சி நடத்தினால் போதுமென்றபேராசைக்குள் பாஜக தலைவர்கள் மூழ்கி விட்டனர். லட்சக்கணக்கான மக்களைக்கொன்று குவித்தது ஒன்றுதானே பிரபாகரனின் சாதனை. இந்த லட்சணத்தில்வைகோவை தமிழ்நாட்டு பிரபாகரன் என்று சித்தரிப்பது வெட்கக்கேடு.

எம்.ஜி.ஆர். காலந்தொட்டு இந்திய ஒருமைப்பாட்டில் எங்கள் நிலை உறுதியானது.கட்டுண்டு வாழோம், பிரிவினை நாடோம், சம நிலையில் இணைவோம் என்பதேஎங்களது தாரக மந்திரம். அதே நேரத்தில் கருணாநிதி எண்ணமும் செயலும் தேசஒற்றுமைக்கு எதிரானது. வாய்ப்பு கிடைக்கும் போதல்ெலாம் தேச ஒற்றுமைக்குஎதிரான நிலை எடுப்பது கருணாநிதியின் வாடிக்கை.

கருணாநிதிக்கு எப்போதுமே ஒரு விபரீத ஆசை உண்டு. இந்தியாவின் ஒருபகுதியையும், இலங்கையின் மறு பகுதியையும் இணைத்து ஒரு தனித் தமிழ்த் தேசம்உருவாக்கி அதன் அதிபராக வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் அந்த ஆசை.

அந்த தேசத்துக்கு பிரபாகரனைத் தளபதியாக்க வேண்டும் என்பதுதான் அவரதுவிருப்பம். இந்த உண்மையைப் பிரதிபலிக்கும் வகையில்தான் திமுக, மதிமுக என்றுநான் பிரித்துப் பார்க்கவில்லை. என்னையும், வைகோவையும் பிரித்துப்பார்க்கவில்லை. நானும், வைகோவும் ஒன்று என்று கருணாநிதி பேசியுள்ளார்.

பிரபாகரன் பேட்ஜ் அணிந்து மாநாட்டில் வந்த மதிமுக தொண்டர்களை கருணாநிதிவருணித்த விதம் அவரை முதல்வர் பகுதியில் இருக்கத் தகுதி அற்றவர் என்பதைஅல்லவா எடுத்துக் காட்டுகிறது. என் குழந்தைகள், நான் பெற்றெடுத்த மாணிக்கங்கள்என்று தேசத் துரோகத்திற்கு துணை போவோரை கருணாநிதி தாலாட்டுவது எதற்காக.

கருணாநிதியையும், வைகோவையும் கைது செய்ய வேண்டும். தி.மு.க. வையும் தடைசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X