For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கூட்டணித் தலைவர்களுக்கு "கடுக்காய் கொடுத்த ஜெ.

சென்னை:

சென்னயில் வியாழக்கிழமை நடந்த தமிழக எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஒரே மேடையில் கைகோர்த்த நிகழ்ச்சியை ஜெயலலிதாபுறக்கணித்தார். இது, தமாகா உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை கண்டிப்பதற்காக இக்கட்சி கூட்டிய கூட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமாகாதலைவர் மூப்பனார், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்ல கண்ணு, தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப்,விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ஜனதா தளம் (எஸ்) தலைவர் வடிவேலு, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் ஜெகவீரபாண்டியன்ஆகியோரை அழைத்திருந்தனர்.

ஒட்டுமொத்த எதிர்க் கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் ஏறப் போவதால், இந்த கூட்டம் அரசியல் ரீதியாக அதிக முக்கியத்துவம்பெற்றது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இக்கூட்டம் நடைபெறுவதால், தேர்தலுக்கான அணியாகவும் இது மாறும்என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த கூட்டத்திற்கு ஜெயலலிதா திடீரென்று வர மறுத்து விட்டார். அதிமுக சார்பில் கட்சி அவைத் தலைவர் காளித்துவை அனுப்பி வைத்துவிட்டு ஜெயலலிதா வராமல் இருந்து விட்டார்.

இதற்கு மேடையில் காளிமுத்து கூறிய காரணம், ஜெ.வுக்கு உடல் நலம் பாதிப்பு என்பது.

ஆனால், அதில் துளியளவும் உண்மையில்லை என்பதை அதிமுகவினரே ஒத்துக் கொள்கின்றனர். ஏனெனனில், ஜெயலலிதா வருவாரா மாட்டாராஎன்ற கேள்வியை, அதிமுக அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்கள் கேட்ட போதெல்லாம் தெரியாது என்றே பதில்அளிக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஜெயலலிதா வருவதாக இருந்தால், அவரது கட்சியினர் ஆடம்பர ஏற்பாடுகள் செய்து அவரை வரவேற்கத் தயாராகஇருந்திருப்பார்கள். சென்னையில் உள்ள மூன்று மாவட்டச் செயலாளர்களை தவிர வேறு எந்த முக்கிய பிரகர்களும் வரவில்லை என்பதோடு,அதிமுகவினர் கூட்டமும் குறைச்சல்தான். எனவே அதிமுகவினருக்கு ஜெயலலிதா வர மாட்டார் என்ற தகவல் முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டுவிட்டது.

கடைசி நேரத்தில் இந்த கட்சிகளையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற நோக்கத்தில் தான் காளிமுத்துவை ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்என்கிறது அதிருப்திக்கு ஆளாகியுள்ள தமாகா வட்டாரம்.

ஜெயலலிதா வராமல் போனதற்கு டாக்டர் ராமதாஸ் தான் காரணம் என்ற பரபரப்புக் காரணத்தையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். திமுககூட்டணியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் பாமக, அதிமுக பக்கம் அணி மாறவிருக்கிறது என்ற பேச்சு எப்போதோ எழுந்து விட்டது. அந்தபேச்சுக்கு ஆதாரம் இந்த சம்பவம் தான் என்கின்றனர் விஷயம் தெரிந்த தமாகாவினர். எப்படி...?

பாமகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். தமாகாவுடன் கூட்டணி சேர்வதில் பாமகவுக்கு எந்த பிரச்னையும்இல்லை. ஆனால், தமாகாவுடன் நெருங்கிய தோழமை கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் அமைப்பை "குல எதிரியாக பாமக கருதுகிறது.

விடுதலை சிறுத்தைகளுடனான உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் பாமக வைக்கும் நிபந்தனை. இந்த நிபந்தனைகாரணமாகத்தான் ஜெயலலிதா இந்த மேடையில் ஏற மறுத்தார் என்கின்றனர். அந்த மேடையில் எதிர்க் கட்சித் தலைவர்களுடன்திருமாவளவனும் இருந்தார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

ஜெயலலிதாவின் போக்கை உணர்ந்தோ என்னவோ தெகியவில்லை, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்க வேண்டிய மேடையில்,ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளினார் திருமாவளவன்.

ஆனால், அவரது புகழுரைக்கு பலன் கிடைக்காது என்பதை மறுநாளே தெரிந்து கொண்டாரோ என்னவோ, வெள்ளிக் கிழமை செய்தியாளர்களைசந்தித்த திருமாவளவன், ""பாமக அதிகவுடன் கூட்டணி சேர்ந்தால் நாங்கள் இந்த அணியை விட்டு வெளியேறி விடுவோம். ராமதாஸ் அதிமுகஅணியில் சேர முயற்சிக்கிறார். முதல்வர் கருணாநிதி தனது அணியில் இருந்து ராமதாசை வெளியேற்ற முயற்சிக்கிறார் என்றார்.

திருமாவளவன் பேட்டி அளித்த இடம் தமாகாவின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன். ஜெயலலிதா புறக்கணிப்பின் பின்னணி உண்மைகளைவெளிப்படுத்தும் விதமாக அமைந்த திருமாவளவனின் திடீர் பேட்டிக்கும், தமாகாவின் அதிருப்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதும் உண்மை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X