For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

திமுக - பாமக விரிசல் விரிகிறது

தி.மு.கவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய, புலிகள் விவகாரம் பற்றி தனிஈழம்தான் தீர்வு என்று பேசுவது உட்பட, கடலூர் கலவரம் வரை பல விஷயங்களில்கருணாநிதி ராமதாஸ் மீது கோபத்தில் இருந்தார். இந்த நிலையில் அ.தி.மு.கதரப்பிலிருந்தும் பா.ம.க அ.தி.மு.க கூட்டணியில் சேருவது நல்லது தான் என்றுமுடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது.

க்ரீன் சிக்னல் விழ வேண்டியது தான் பாக்கி. அந்த சிக்னல் என்பது நாற்பது சீட்களாககூட இருக்கலாம். அ.தி.மு.கவும் சரி என்று சொல்கின்ற நிலையில் தான் இருக்கிறது.கூட்டணி பற்றிய அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் கூட வரலாம். இந்தநிலையில் ராமதாஸ் தி.மு.க கூட்டணியைவிட்டு அ.தி.மு.கவில் சேர்ந்து விடுவார்என்று தெரியவர சற்று கோபமடைந்தாராம் கருணாநிதி.

அவருடைய கோபத்திற்கு என்றுமே ஒரு சக்தி உண்டு. இந்த நேரத்தில் வாழப்பாடிராமமூர்த்தியும் , ராமதாஸ் மீது கோபத்தில் இருக்க ஒரு திட்டம் உருவானது. ஏற்கனவேதீரன் ராமதாஸை விட்டுப் பிரிந்தார். அதேமாதிரி இப்பொழுதும், ராமதாஸ்அ.தி.மு.கவோடு கூட்டணி வைத்தால் , தி.மு.க பக்கம் அங்கிருந்து யார் யார்வருவார்கள் என்று ஒரு ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்காக வாழப்பாடியார்வைத்த குறி பா.ம.க வில் உள்ள மத்திய அமைச்சர்கள்.

பா.ம.கவின் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சரான சண்முகத்தை,சுகாதாரத்துறையிலிருந்து நிலக்கரி வளத்துறைக்கு மாற்றம் செய்து ஒரு சின்ன ஷாக்கொடுக்கப்பட்டது. அதுவரை வாழப்பாடியாருக்கும் , தனக்கும் தான் மோதல் என்றுயோசித்துவந்தார் ராமதாஸ். சண்முகம் இலாகா மாற்றப்பட்டதன் பின்னனியில்கலைஞரும், வாழப்பாடியாரும் சேர்ந்து செயல்பட்டதாக நினைக்ககொதித்துப்போனார்.

இந்த நேரத்தில் தான் பிரதமரை சந்திப்பது அவரிடம் எல்லாப் பிரச்சனைகளையும்சொல்வது என்று முடிவெடுத்தார். ஆரம்பத்தில் தமிழகத்திலேயே பிரதமரைசந்திக்கத்தான் நினைத்தார். டெல்லிக்கு பேசி நேரம் கேட்க, இன்னொரு முறைசந்திக்கலாமே இப்பொழுது நேரம் இல்லை என்று தகவல் வர சரி தமிழகத்தில்வேண்டாம். நானே டெல்லிக்கு வருகிறேன் என்று அவசரம் அவசரமாக கிளம்பிச்சென்றார் ராமதாஸ்.

திட்டமிட்டபடி கடந்த 2-ம் தேதி, சந்தித்தார். பிரதமரிடம் தமிழகத்தில் உள்ள கூட்டணிசூழ்நிலை ஆரோக்கியமாக இல்லை. எங்களுக்கு இவ்வளவு சீட் வேண்டும் என்றுகேட்பது எங்கள் உரிமை. அது தமிழக அரசியல் சூழ்நிலையைப் பொருத்தது. அதைபேசித் தீர்க்க வேண்டுமே ஒழிய, பா.ம.க வை உடைக்க நினைத்து செயல்படுவதுநியாயமா? வாழப்பாடி ராமமூர்த்தி , வன்னியர் சங்கங்களை குறிவைக்கிறார்.மக்களை குழப்பப் பார்க்கிறார்.

வாழப்பாடியை விட எங்கள் கட்சி பலமானது. இந்த நிலையில் கலைஞர் ,வாழப்பாடியாருடன் சேர்ந்துகொண்டு செயல்படுவது ஆரோக்கியமாக படவில்லைஎன்று மிகவும் வருத்தப்பட்டாராம்.

அமைச்சரவை மாற்றம் பற்றியும் விசாரித்தாராம் ராமதாஸ். பிரதமர் சிலவிளக்கங்களைச் சொன்னாராம். ராமதாஸ் பேசிய பின்பு தான் பிரதமருக்கும் தமிழககூட்டணி சூழ்நிலை புரிந்தது என்கிறார்கள் பா.ம.கவினர். அன்று மட்டும் 45நிமிடங்கள் பிரமருடன் பேசினார் ராமதாஸ். அதன் பிறகு, வாருங்கள் சேர்ந்தேவிமானத்தில் சென்றுவிடலாம் என்று சொல்ல ராமதாஸூம் அதையே விரும்பினாராம்.

பிரமருடன் டெல்லியில் இருந்து சென்னை ( டைடல் பார்க் - தகவல் தொழில் நுட்பபூங்கா திறப்பு விழா) வரும் பொழுதும் எனக்கு இப்பொழுதுள்ள கூட்டணியில்தொடருவதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் எங்கள் கட்சிகளையும், எங்கள்சமுதாய மக்களையும் குறிவைத்து கருணாநிதி, வாழப்பாடியாரின் செயல்கள்இருப்பதாத படுகிறது. இதை சற்று எடுத்துச்சொல்லுங்கள் என்றுகேட்டுக்கொண்டாராம். ராமதாஸ்.

அதன் பிறகு சென்னை வந்த பிரதமர் , கருணாநிதியிடம் தமிழக கூட்டணி நிலவரம்பற்றியும் விசாரித்தாராம். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு ஏன் இப்படிசெயல்படுகிறார்கள். வாழப்பாடி ராமமூர்தியிடம் சொல்லுங்கள் என்றுகேட்டுக்கொண்டாராம். மிக நுணுக்கமாக இங்குள்ள அரசியல் பிரச்சனைகள் பற்றியும்விசாரித்துச் சென்றிருக்கிறாராம் பிரதமர்.

ராமதாஸூம் விடவில்லை. பா.ம.கவை உடைக்க ஏதாவது வேலைகள் நடக்கிறதா?யார் யார் இங்கிருந்து தாவுகிற ஐடியாவில் இருக்கிறார்கள் என்று கட்சிக்குள்ளேயேவிசாரித்திருக்கிறார். சிலரை குறித்தும் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நம் கட்சிமுன்பைவிட பலமானது. என்பதை நிரூபிக்கவும் நினைத்தார் ராமதாஸ்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நிருபர்களை சந்தித்தவர், தி.மு.க அரசு பல காலிசங்கங்களை ஊக்குவித்து வருகிறது. உதாரணத்திற்கு வன்னியர் அடிகளார்தலைமையில் உள்ள வன்னியர் சங்கம். தீரன், வாழப்பாடி ஆகியோருடன் இருந்தசி.என்.ராமமூர்த்தி இப்பொழுது எங்களோடு சேர்ந்து விட்டார். என்றவர் அவரைநிருபர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து சி.என் ராமமூர்த்தி (ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பிரிந்துசென்று தனியாக வன்னியர் சங்கம் ஆரம்பித்தவர். இப்பொழுது ராமதாஸூடன்சேர்ந்துள்ளார்.) நிருபர்களிடம் பேசுகையில், டாக்டர் ராமதாஸ் வன்னியர்சமுதாயத்துக்காக பாடுபட்டு வருகிறார். ஆகவே அவரது தலைமையில் வன்னியர்சமுதாயத்துக்கு பாடுபடவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்துள்ளேன்.

யாராவது ஒருவரை வெட்டியாவது டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்பு மணிஆகியோர் மீது பழி போட வேண்டும் என்று ஒருவர் கூறினார். அதை தாங்கிக்கொள்ளாமல் தான் டாக்டர் ராமதாஸ் தலைமையிலேயே சேரமுடிவு செய்துள்ளேன்.யார் அந்த ஒருவர்? என்று நிருபர்கள் கேட்க அவரும், இன்னொருவரும் சேர்ந்து,வன்னிய சமுதாய மக்களை குலைக்கப் பார்க்கிறார்கள். ஒற்றுமையின்மையைஏற்படுத்தப் பார்க்கிறார்கள் என்றார்.

யார் அந்த இருவர் என்று நிருபர்கள் தொடர்ச்சியாக கேட்க.. இரண்டு நரிகள் அந்தஇருவர் என்று ராமதாஸைப்பார்க்க ராமதாஸ் சிரித்தபடியே இருந்தார். ஒரு சின்னதயக்கத்திற்குப் பிறகு கருணாநிதி, வாழப்பாடி தான் அந்தக் குள்ள நரிகள். அதனால்தான் ராமதாஸிடம் வந்துள்ளேன் என்றார் ராமமூர்த்தி.

ராமமூர்த்தி மட்டுமல்ல இன்னும் பலர் வரிசையாக வருவார்கள் பாருங்கள்.தேர்தலுக்கு முன் இன்னும் பல விஷயங்கள் நடக்கும் பலர் பா.ம.கவில் சேருவார்கள்.அப்பொழுது தான் தெரியும் ராமதாஸ் யார் என்று என்று சிரிக்கிறார்கள் பா.ம.கவினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X