தமிழகத்தில் இன்று
கடைக்காரரின் கவனக்குறைவால் இறந்த குழந்தை
சென்னை:
ஓம திரவம் (ஓம வாட்டர்) என்று கொடுக்கப்பட்ட "ஆசிடை குழந்தைக்குகொடுத்ததால் அந்தக் குழந்தை இறந்தது. கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரைச் சேர்ந்தவர் முருகன்.அவரது மனைவி கோமதி. இவர்களுக்கு விஜய் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தைஇருந்தது.
10 நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. மகன்துடிப்பதை கண்ட தாய் கோமதி, பக்கத்து வீட்டில் சொல்லியுள்ளார். அவர்கள்அஜீரணக் கோளாறாக இருக்கும், ஓமவாட்டர் வாங்கிக் கொடு, சரியாய் போய் விடும்என்று ஆலோசனை கூறியுள்ளனர்.
அதன்படி அத்தெருவில் உள்ள ஒரு கடைக்கு சென்றார் கோமதி. வியாபார பரபரப்பில்இருந்த கடைக்காரர், ஓம வாட்டர் பாட்டிலுக்கு பதிலாக ஆசிட் இருந்த பாட்டிலைதவறுதலாக எடுத்துக் கொடுத்தனுப்பி விட்டார்.
படிக்கத் தெரியாத அந்த ஏழைத் தாயும், வேகமாக எடுத்து வந்து குழந்தைக்குபுகட்டினார். வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த குழந்தை சில விநாடிகளில்மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கி விழுந்தது.
அலறித் துடித்த தாய், அக்கம் பக்கத்தவர் துணையோடு குழந்தையை தூக்கிக் கொண்டுஅருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், குழந்தை இறந்துவெகு நேரமாகி விட்டது என்ற பதிலை தான் டாக்டர்கள் தெரிவித்தனர். பின்னர்வீட்டில் வந்து பார்த்தபோது தான் விவரம் தெரிந்தது. குழந்தைக்கு கொடுத்ததுஓமத்திரவம் அல்ல; உயிரைக் குடிக்கும் ஆசிட் என்று.
தவறுதலாக நடந்த குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், போலீசுக்கு பயந்துதலைமறைவான கடைக்காரர் தங்கவேலுவை, போலீசார் கண்டுபிடித்து கைதுசெய்தனர்.