தமிழகத்தில் இன்று
20 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தார் ரஜினி
சென்னை:
சென்னையில் புதன் கிழமை ரூ. 20 லட்சம் செலவில் இருபது ஏழை ஜோடிகளுக்குஇலவச திருமணம் செய்து வைத்தார் ந டிகர் ரஜினிகாந்த்.
ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் 20 ஏழை ஜோடிகளுக்கு இலவசதிருமணம் செய்து வைக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். நான்காவது ஆண்டாகசென்னையில் புதன் கிழமை இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை ரஜினியும்,அவரது மனைவி லதாவும் சேர்ந்து நடத்தினர்.
மணப்பெண்ணுக்கு தங்கத் தாலி, பட்டுப்புடவை, மாப்பிள்ளைக்கு தங்கச் சங்கிலி,மோதிரம், 80 பாத்திரங்கள், உறவினர்கள் 50 பேருக்கு சாப்பாடு, அவர்களுக்கானபயணச் செலவு என ஒரு ஜோடிக்கு ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து திருமணம் செய்துவைத்தார் ரஜினி.
காலை 9.15 மணிக்கு திருமண நிகழ்ச்சிகள் துவங்கின. 9. 55 மணிக்கு 20ஜோடிகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நிடைபெற்றது. மணமக்களை ரஜினியும்,லதாவும் வாழ்த்தினர்.
பின்னர் திருமண விருந்துடன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்பினார் ரஜினி.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!