தமிழகத்தில் இன்று
திருநள்ளாறில் ஆக. 3-ல் சனிப்பெயர்ச்சி விழா
சென்னை:
திருநள்ளாறில் ஆகஸ்ட் 3-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இரண்டரைஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி நடக்கிறது. கடந்த ஜூன் மாதம் குருப்பெயர்ச்சி நடந்தது.
இந்த நிலையில், அடுத்த மாதம் 3 ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அதன்படி இதுவரையில் மேஷ ராசியிலிருந்த சனிபகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார்.சனி பகவான் ஆகஸ்ட் மாதம் 3 ம் தேதி மாலை 4.01 மணிக்கு மாறுகிறார்.
திருநள்ளாறில் நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் இதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்வந்து கொள்வார்கள்.
இந்த வருடம் 4 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு 4 புதிய பேருந்துகள் நிலையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
250 சிறப்புப் பேருந்துகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் ரயில்களில் கூடுதல்பெட்டிகளும், சென்னை, திருச்சி, கோவை மார்க்கமாக சிறப்பு ரயில்களும் விட நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!