For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மறைந்த நடிகர் ஜெய்சங்கருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் சென்னையில்நடைபெற்றது.

ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் திரளாக கலந்து பங்கேற்றுஜெய்சங்கருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். அந்தக் காலத்துஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி கட்டியவர். அவர் தனது61-வது வயதில் மரணமடைந்தார்.

அவருக்கு திரையுலகின் சார்பில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் சென்னையில்நடைபெற்றது. தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் தலைமை வகித்தார். நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த் முன்னிலை வகித்தார். நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார்,நெப்போலியின், விஜயகுமார், ராஜேஷ் மற்றும் பலர் பேசினர்.

ரஜினி பேசுகையில், ஜெய்சங்கர் ரொம்ப கஷ்டப்பட்டார். பணத்துக்காக இல்லை.வேலையில்லாம கஷ்டப்பட்டார். பிசியா இருந்த அவரால் கொஞ்ச காலம் கூட சும்மாஇருக்க முடியவில்லை. வேலை இல்லாமல் இருக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். அதனாலதயாரிப்பளர்களும், டைரக்டர்களும் புதியவர்களை வைத்து படம் எடுக்கும் போது,பழைய நடிகர், நடிகைகளுக்கும் வாய்ப்பு கொடுங்கள். அவர்களையும் மறந்துவிடாதீர்கள் என்றார்.

விஜயகாந்த் பேசுகையில்,ரொம்ப நல்லவர் ஜெய்சங்கர். என் மேல ரொம்ப பாசமாகஇருப்பார். இரவு நேரங்களில் படப்பிடிப்பு வைத்தால் மட்டும் கோபப்படுவார். உலகவிஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பார் என்றார்.

சரத்குமார் பேசுகையில், ஒருவர் நல்லவராக நடந்தால் இறந்த பிறகும் அவருக்குமரியாதை உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டு ஜெய்சங்கர் என்றார்.

ஏ.வி.எம். சரவணன் பேசுகையில், ஜெய்சங்கர் பெயரில் ஒரு அறக்கட்டளைஆரம்பிக்க வேண்டும் என்றும். அதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்என்றும கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X