வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியா மீதான ஜப்பான் பொருளாதாரத் தடை ரத்தாகுமா?
டோக்கியோ:
இந்தியா மீதான பொருளாதாரத் தடைகளை ஜப்பான் விலக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா, பொக்ரானில் அணு குண்டு வெடித்தது. இதையடுத்து இந்தியா மீது ஜப்பான் பொருளாதாரத் தடைகளை விதித்தது.இந்தியாவைத் தொடர்ந்து அணு ஆயுதப் சோதனை நடத்திய பாகிஸ்தான் மீதும் ஜப்பான் பொருளாதாரத் தடையை அறிவிதித்தது.
இரு நாடுகளுக்கும் இனி புதிதாகக் கடன் வழங்குவதில்லை என்றும் ஜப்பான் அறிவித்தது. வளரும் நாடுகளுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கும் நாடுஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் மேற்கொண்டு அணு ஆயுதப் பரிசோதனையை மேற்கொள்ளவில்லை. இதையடுத்துபொருளாதாரத் தடைகளை ஜப்பப் விலக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் புதிய பிரதமர் யோஷிரோ மோரி அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளஉள்ளார்.
அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்படுவது குறித்து அறிவிப்பை யோஷிரோ மோரிவெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில், ஜப்பான் பிரதமர் யோஷிரோ மோரி இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள தகவலை மத்தியவெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஆனால், பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்வது குறித்த தகவல்களை மறுத்துள்ளனர். அத்தகைய தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லைஎன்று அவர்கள் கூறியுள்ளனர்.