தேர்தல் முடிவு 
மத்தியப் பிரதேசம் - 230
PartyLW
CONG10012
BJP9415
IND41
OTH40
ராஜஸ்தான் - 199
PartyLW
CONG3464
BJP3044
IND85
OTH311
சட்டிஸ்கர் - 90
PartyLW
CONG3532
BJP123
BSP+71
OTH00
தெலுங்கானா - 119
PartyLW
TRS285
TDP, CONG+021
AIMIM07
OTH13
மிஸோரம் - 40
Party20182013
MNF265
IND80
CONG534
OTH10
 • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தமிழகத்தில் இன்று

  By Staff
  |

  அண்ணா சாலையில் அலுவலகம் ....களம் இறங்குகிறார் அன்புமணி

  சென்னை:

  தமிழக அரசியல் களத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. தி.மு.கஅல்லது அ.தி.மு.க வுடன் வழக்கமாக கூட்டணி வைத்து வரும் பா.ம.க, இந்த முறையாருடன் கூட்டணி வைப்பது என்பதில் பல விதமான ஆலோசனையை தங்களதுகட்சிக்குள்ளேயே நடத்தி வருகிறது.

  திராவிட கட்சிகளின் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பது சற்று பலவீனமானவிஷயம் தான் என்று பேச ஆரம்பித்தார் அந்த பா.ம.க தலைவர். திராவிடகழகங்களுடன் கூட்டணி என்பது தேவை என்று எந்த அளவிற்கு நாங்கள்நினைக்கிறோமோ அதே மாதிரியான கூட்டல், கழித்தல் விஷயங்கள் ஒவ்வொருதிராவிடக் கட்சிகளிலும் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.

  மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், குறைந்தது 80 தொகுதிகளில் பா.ம.க யாருடன்கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சி வேட்பாளர் தான் வெற்றி பெறுவார் என்பதுதி.மு.க , அ.தி.மு.க கட்சியின் தலைவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.அவர்களுக்கு எங்களுடனான கூட்டணியும் வேண்டும். எங்கள் சமுதாய மக்களின்ஒட்டுக்களும் வேண்டும். ஆனால் சீட் மட்டும் பதினைந்து இருபது என்று பேரம்பேசுவார்கள் என்று கொதிப்பாகவே பேசினார் அந்த பா.ம.க தலைவர்.

  தி.மு.க அல்லது அ.தி.முக. இதில் எந்த கட்சியோடு பா.ம.க சேரும் என்று பலரும்எதிர்பார்த்திருக்க டாக்டர் ராமதாஸ், எந்த கட்சியில் எங்களுக்கு அதிக மான சீட்கிடைக்கிறதோ அந்த கட்சியுடன் எங்கள் கூட்டணி என்று மிகவும்வெளிப்படையாகவே பத்திரிகையாளர்களிடம் சொன்னார்.

  தி.மு.க தலைமைமீது ஏற்கனவே டாக்டர் ராமதாஸூக்கு

  (வாழப்பாடி விவகாரம்) இருக்கும் கோபம் இன்னும் தனியவில்லை. இந்த நேரத்தில்அ.தி.முக வில் பேரம் பேச ஆரம்பித்தார்கள். குறைந்தது அறுபது சீட்கள். கூடவேஎதிர்காலத்தில், பாண்டிச்சேரியில் பா.ம.க ஆட்சியமைக்க அ.தி.மு.க உறுதியளிக்கவேண்டும். இந்த இரண்டு விஷயங்களை அ.தி.மு.க ஏற்றுக்கொண்டால் இனியாராலும் பிரிக்க முடியாத அளவிற்கு அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க தயார்என்றாராம் ராமதாஸ்.

  சட்டமன்ற தொகுதி சீட்களையாவது ஒதுக்கலாம், ஆனால் பாண்டிச்சேரியை எப்படிபா.மகவுக்கு விட்டுக்கொடுக்க முடியும் என்று யோசித்து வருகிறார்களாம் அ.தி.மு.க.வினர். ராமதாஸின் இந்த டிமாண்டில் அ.தி.மு.க சற்று ஆடிப்போய்த்தான் இருக்கிறதுஎன்கிறார்கள் அ.தி.மு.கவில்.

  இது தவிர அ.தி.மு.க., பா.ம.க இடையே இன்னொரு வர்த்தக பேரம் நடந்தது.பா.ம.கவின் தலைமை அலுவலகம் தற்பொழுது தேனாம் பேட்டையில் இருக்கிறது.மிகவும் குறுகலான தெருவில், மிகச்சிறிய அலுவலகத்தில் இருக்கிறது பா.ம.கஅலுவலகம். 1989-ல் கட்சி ஆரம்பிக்கும் பொழுது அந்த அலுவலகம்ஆரம்பிக்கப்பட்டது.

  தற்பொழுது கட்சியின் பலமே வேறு. மத்திய அமைச்சர்கள், டெல்லியில்ஆட்சியமைப்பதில் கூட பா.ம.கவுக்கும் பங்கு இருக்கிறது. இந்த நிலையில் கட்சியின்தலைமை அலுவலகம் சின்னதாக இருந்தால் எப்படி என்று யோசித்து டாக்டர்ராமதாஸிடம் சொன்னார்களாம். நல்ல அலுவலகமாக பாருங்கள், சென்னைஅண்ணாசாலையிலேயே இருக்கட்டும் என்றாராம் ராமதாஸ்.

  இந்த நிலையில் தான் அ.தி.மு.க தரப்பில் இருந்து பேரம் பேச ஆரம்பித்தார்கள்.ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க அலுவலகம் அமைக்கலாம் என்று சென்னைஅண்ணாசாலையில் வாங்கப்பட்ட சபையர் தியேட்டர் பற்றி பேசப்பட்டது. இதற்காகராமதாஸின் மகன் அன்புமணியும், அ.தி.மு.க. எம்.பி தினகரனும் பேசினார்கள்என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

  தினகரன் தரப்பிலிருந்து, தியேட்டர் வாங்கும் பொழுது ஆறு கோடி கொடுத்தோம்,ஆறு வருடங்கள் ஆகிவிட்டது இன்றைய மதிப்பு பத்து கோடி ரூபாய்க்கும் அதிகம்என்று இழுத்தாராம். இறுதியில் பன்னிரெண்டு கோடி ரூபாய் என்றால் நாங்கள்கொடுக்கிறோம் என்று சொல்லப்பட்டதாம்.

  விஷயம் ராமதாசுக்குச் செல்ல, பன்னிரெண்டு கோடிரூபாய் அதிகம். யோசிக்கலாம்என்றார்களாம். பா.ம.க தரப்பில் மறுபடியும் விவாதிக்கப்பட்டது. சிலர்அண்ணாசாலையில் தியேட்டரை வாங்குவது பெரிய விஷயம். பெரிய இடம் கூட,வாழப்பாடி ராமமூர்த்தி கூட ராஜா அண்ணாமலை புரத்தில் பெரிய அளவில்அலுவலகம் வைத்திருக்கும் பொழுது , பா.ம.கவுக்கு இந்த மாதிரி பெரிய இடம்இருப்பது தான் நன்றாக இருக்கும் என்று பேசப்பட்டதாம். விலை பற்றிவேண்டுமானால் மறுபடியும் பேசலாம் என்று சிலர் கருத்துச் சொன்னார்களாம்.

  சென்டிமென்ட் பயம்!

  கட்சியில் உள்ள பலர் சென்டிமென்ட்டாக சில விஷயங்களை ராமதாஸிடம்சொல்லியிருக்கிறார்கள். ஜெயலலிதா அந்த தியேட்டரை வாங்கிய பின்பு தான்ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தார். கோர்ட், கேஸ் , ஜெயில் என்று இன்னும் வழக்குதீர்ந்தபாடில்லை. அவ்வளவு ராசியான சொத்தாக படவில்லை. சொத்து வாங்கியநேரம் நமக்கும் வில்லங்கம் வந்துவிடக்கூடாது என்று சொல்ல நானும் அதைத்தான்யோசித்தேன். வேறு இடம் பார்க்கலாம் என்றாராம் ராமதாஸ். சரி, தலைவரின் முடிவுஇது என்று சபையர் திட்டம் கைவிடப்பட்டது.

  சபையர் தியேட்டர் திட்டம் கைவிடப்பட்டவுடன், சென்னையில் பல இடங்களிலும்அலுவலகம் தேடும் பணி தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. அலுவலகம் வேறு எங்கும்வேண்டாம். அண்ணாசாலையில் தான் வேண்டும். நிதானமாக யோசித்து வாங்கலாம்.அண்ணாசாலையை அலசுங்கள் என்று ராமதாஸ் சொல்ல சில நாட்கள்யோசித்தவர்கள். அண்ணாசாலையில் உள்ள பெரிய ஹோட்டல் ஒன்றை தற்பொழுதுமுடிவு செய்திருக்கிறார்களாம்.

  வழக்கமாக ராமதாஸ் அங்கேதான் தங்குவார். கட்சியின் பல முடிவுகள் கூடஅங்கேயே எடுக்கப்படும். ராமதாசுக்கும் சரி, கட்சிக்கும் கூட அந்த ஹோட்டல் மிகவும்ராசியானது. அதையே பேசி முடிக்கலாம் என்று முடிவானது. பல கோடி மதிப்புள்ளஅந்த ஹோட்டல் தி.மு.க தலைமை அலுவலகம் அருகிலேயே இருப்பதை மிகவும்பெருமையாக நினைக்கிறார்கள் பா.மகவினர்.

  பா.ம.க தலைமை அலுவலகம் அந்த ஹோட்டலில் அமைந்தால் சிறப்பாக இருக்கும்.இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி விட்டன என்கிறார்கள்பா.ம.கவில். தவிர, தி.மு.க , அ.தி.மு.க கட்சிகளை விட அந்த ஹோட்டல் கட்டிடம்மிகவும் பெரியது என்பதால் அதுவே சிறந்தது என்று கருத்து வேறுபாடு இல்லாமல்ஒப்புக்கொண்டிருக்கிறார்களாம் பா.மகவில். இந்த ஐடியாவும் கூட அன்பு மணிதரப்பில் இருந்துதான் எடுத்துச் சொல்லப்பட்டது என்கிறார்கள் பா.ம.க.வில்.

  களம் இறங்குகிறார் அன்புமணி...

  இந்த ஹோட்டல், பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பா.ம.க.வினரைஉற்சாகப்படுத்தியிருக்கிறது என்றால் இன்னொரு சந்தோஷமும் பா.ம.க தரப்பில்இருக்கிறது.

  இதுவரை, அரசியலில் நேரடியாக களத்தில் இறங்குவாரா மாட்டாரா என்று தவிப்புடன்காத்திருந்த பா.மகவினருக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும்,அன்புமணி களத்தில் இறங்குகிறார் என்கிற செய்தி சந்தோஷத்தில் திக்குமுக்காடவைத்திருக்கிறது.

  ஆரம்பகாலத்தில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்த ராமதாஸின் மகன் அன்புமணி,ராமதாஸின் பசுமைத்தாயகம் என்கிற இயக்கத்தை நடத்தி வருகிறார். நமதுகட்சியிலேயே புதுமுகம் ஒன்று தேவை. நீங்கள் பதவியோ, சட்டமன்றத்திற்குள்ளோகாலடி எடுத்து வைக்க மாட்டீர்கள். ஏன், அரசு காரில் கூட ஏறமாட்டீர்கள்.

  அன்புமணியை நேரடியாக அரசியலில் பங்குகொள்ளச் செய்யுங்கள். எதிர்காலத்தில்வெற்றிக்கனியை அவரிடம் கொடுக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று பா.மகவினர்சொல்ல மிக நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ராமதாசும், அன்புமணியும்ஒப்புக்கொண்டிருக்கிறார்களாம். எப்பொழுது அறிவிப்புச் செய்யலாம், என்கிறஆலோசனையும் கூட நடந்து முடிந்து விட்டது என்கிறார்கள் பா.மகவில்.

  சென்னை என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ராமதாஸ், வேண்டாம் மதுரை அல்லதுதிருச்சிதான் சிறப்பாக இருக்கும். இன்னும் ஒரிரு மாதங்களில் மதுரையில் நடக்கஇருக்கும் தொகுதி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி அதில் அறிவிப்பு செய்யலாம்.

  ஏற்கனவே தென் மாவட்டங்களில் கட்சி சற்று வீக்காக இருக்கிறது.தென்மாவட்டங்களை பலப்படுத்தும் விதமாக, மதுரையில் ஆரம்பித்து செயல்பட்டால்மிகவும் உற்சாகமாக இருக்கும் என்றாராம்.

  இதனால், உற்சாகத் துள்ளலில் இருக்கிறார்கள் பா.மகவினர். சரி தேர்தலில்போட்டியிடுவாரா அன்புமணி என்று கேட்டால், நல்லா கேட்டீங்க போங்கஅன்புமணியை முதல்வராக்கி பார்க்கணும் என்கிறது தான் எங்கள் நோக்கமே என்றுஉற்சாகமாக சொல்கிறார்கள் பா.ம.க இளைஞர் அணியினர்.

  அன்புமணியும், சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டு விட்டார்.தொகுதிதான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார்கள். கடலூர்மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் அன்புமணி போட்டியிடுவார் என்கிறார்கள்பா.ம.வில். கூட்டணி குழப்பங்களை மறந்து உற்சாகசத்தில் இருக்கிறார்கள் பா.ம கதொண்டர்கள்.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more