For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

முதல் பக்கத் தொடர்ச்சி

கே: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தற்போதைய நிலை என்ன?

ப: தேசியத்தை அமுக்கி வைத்து ஜனநாயகத்தை ஓவர் டோஸாகக் கொடுத்து, கூட்டணி காப்பாற்றப்பட்டு வருகிறது.

கே: சென்ற தேர்தலில் தி.மு.க. வுக்கு ஓட்டுப் போட்டு,அ.தி.மு.க.வின் ஊழல்களைத் தெரிந்து கொண்டோம். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு ஓட்டுப்போட்டு, தி.மு.க. வின் ஊழல்களைத் தெரிந்து கொண்டால் என்ன?

ப: செய்யலாம். இப்படி யாரூடைய ஊழலை தெரிந்து கொண்டோமோ, அவர்களுக்கே ஓட்டு என்று நாம் தீர்மானித்து விட்டால், அப்புறம் ஊழல்செய்வதுதான் ஓட்டு பெறுவதற்கு சுலபமான வழி என்று பல கட்சிகளும் புரிந்து கொள்ளும். குறையே இருக்காது.

கே: கருணாநிதிக்கு வேண்டிய நிறுவனம் என்பதால், டான்சி நிலத்தை வாங்கிய கார்த்தீபன் டூரிஸ்ட் பஸ் சர்வீஸ் நிறுவனம் மீது வழக்குப் போடவில்லை என்றுசசிகலா குற்றம் சாட்டியுள்ளாரே?

ப: உண்மையாக இருக்கலாம். தெரியவில்லை.

கே: பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கையை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஸன் கடுமையாகச் சாடியுள்ளாரே?

ப: சாடல் இருக்கலாம். அதனால் அரசுக்கு ஆடல் வந்துவிடாது. ஆர்.எஸ்.எஸ். தனது ஆட்சேபத்திற்கு ஓர் எல்லையை வகுத்துக் கொள்ளும் என்றுநினைக்கிறேன்.

கே: போலீசாருக்கு சங்கம் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று போலீஸ்காரர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளாரே?

ப: அந்த மனு தோல்வியடைய இறைவன் அருள்புரிவானாக!

கே: லண்டணில், லேசெஸ்டர் சதுக்கத்தில் குடிபோதையில் கிடந்த டோனி ப்ளேயரின் மகன், கைது செய்யப்பட்டது குறித்து...?

ப: பிரிட்டனில் சட்டத்திற்கு இருக்கிற மாட்சிமையைப் பார்த்தால், பொறாமையாக இருக்கிறது, இங்கு மட்டும் இப்படி நடந்திருந்தால், அந்தகான்ஸ்டபிள் அத்துடன் கோவிந்தா!

பிடிபட்ட அரசியல் தலைவர் மகன் ஒரு ஜாதி - பிடித்த கான்ஸ்டபிள் வேறு ஒரு ஜாதி என்றால், கேட்கவே வேண்டாம். விவகாரம் வெடித்துக் கிளம்பி,ஊரையே நாசம் செய்து விடும்.

கே: இந்திய அரசியல்வாதிகள் எல்லாருமே, நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரிவினை சக்திகளை ஆதரிக்கத் தொடங்கிவிட்டது - எதைக்காட்டுகிறது?

ப: தேசிய கட்சிகள் பலவீனமடைந்து விட்டன: மாநிலக் கட்சிகளும், ஜாதிக் கட்சிகளும் தலைதூக்கி விட்டன என்ற உண்மையைக் காட்டுகிறது.

கே: எமர்ஜென்சி நாட்களைப் பொற்காலம் என்று ஈ.வி.கே.எஸ் . இளங்கோவன் கூறுகிறாரே?

ப: சற்றும் ஒப்புக் கொள்ள முடியாத சில விபரீதங்களைத் தவிர்த்துப் பார்த்தால், எனக்கே கூட எமர்ஜென்சியே பரவாயில்லை போலிருக்கிறதே என்றுதோன்றத்தான் செய்கிறது.

கே: தங்கள் பத்திரிக்கை கணிப்பில், அ.தி.மு.க. வுக்கு ஓட்டு எண்ணிக்கையின் சதவிகிதம் கூடியுள்ளதாகப் படித்தேன். அப்படியென்றால், அக்கட்சிக்குசெல்வாக்குக் குறையவில்லை என்றுதானே அர்த்தம்...?

ப: ஆமாம்.

கே: அ.தி.மு.க. ஆட்சியில் பிச்சைக்காரன் கூட, 500 ரூபாய் நோட்டால் காது குடைந்தான் என்று காளிமுத்து பெருமைப்பட்டு பேசியுள்ளது பற்றி...?

ப: முந்தைய ஆட்சியின் காலத்தில், கள்ள நோட்டு புழக்கம் அந்த அளவிற்கா இருந்தது? சே, இருக்காது! காளிமுத்து மிகைப்படுத்துகிறார்.

கே: பா.ஜ.க.வைக் கண்டு கூட்டணிக் கட்சிகள் பயப்படுகின்றனவா அல்லது கூட்டணி கட்சிகளைக் கண்டு பா.ஜ.க. அஞ்சுகிறதா?

ப: பயம் பா.ஜ.க.வுக்கு. ஆனால் ஆசை கூட்டணிக் கட்சிகளுக்கு இருப்பதால், அந்த பயம் தணிகிறது.

கே: விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான வீரமணியை பக்கத்தில் வைத்துக் கொண்டு, வைகோ வையும், ராமதாசையும் ஜெயலலிதா சாடுவதுசரியானதா?

ப: வீரமணி பக்கத்தில் இருந்தும் இப்படி ஒரு நிலையை ஜெயலலிதா எடுக்கிறாரே - என்று நான் திருப்தியடைகிறேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X