For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

"ஆசியாவின் எதிர்கால தகவல் தொழில்நுட்ப நுழைவாயில் தமிழகம்"

சென்னை:

எதிர்காலத்தில், ஆசியாவின் தகவல் தொழில்நுட்ப நுழைவாயிலாக தமிழகம் விளங்கப் போகிறது என்று தமிழகமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் "டிஜிட்டல் உலகிற்கு திசைகாட்டி என்ற தலைப்பில் தமிழ் இணையம்-2000 என்ற உலக மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:

1997-ல் சிங்கப்பூரில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, 1999ல் சென்னையில் விடைகள் கிடைத்தன. தகவல் தொழில்நுட்பத் துறை இந்த ஓராண்டில் பல்வேறு திசைகளிலும் முன்னேறி மேம்பாடு அடைந்துள்ளது.

இத்தருணத்தில் நடைபெறும் இந்த மாநாடு, தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய பரிமாணங்களுக்குத் தமிழ்மொழி ஈடுகொடுப்பதற்கு ஏற்ற வழிமுறைகளை வகுத்தளிக்கும் என்று நம்புகிறேன்.

ஆசியாவின் எதிர்கால தகவல் தொழில்நுட்ப வாயில் என வர்ணிக்கப்படும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம்மாணவ மாணவியருக்கு தரம் வாய்ந்த தகவல் தொழில் நுட்பப் பயிற்சி ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மூலமாகவும்அளிக்கப்பட்டு வருகிறது.

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கூட கணினி மற்றும் இணையத்தைத் தயக்கம் சிறிதுமின்றி, இயல்பாகச்செயல்படுத்தும் திறமை பெற்று வளர்ந்து வருகின்றனர். உலகளாவிய தரத்திற்கு ஏற்ப புதிய தகவல் தொழில்நுட்பகட்டுமான வசதிகள் வேகமாக தமிழகத்தில் நறுவப்பட்டு வருகின்றன. டைடல் பார்க் இதற்கு ஒரு பெருமைப்படக்கூடிய பீடு நிறைந்த எடுத்துக்காட்டு.

தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர வேண்டுமெனில் அவை நகர்ப் பகுதிகளுக்கு அப்பாலும் பரவவேண்டும். சாதாரண மக்களும் அதன் பயனைப் பெற தமிழக அரசு உறுதியாக பல திட்டங்களை நிறைவேற்றிவருகிறது.

தமிழ் இணைய மாநாட்டின் போது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டும் என்று நான்கூறியிருந்தேன். அதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, இன்னும் சில வாரங்களில் தமிழ்இணையப் பல்கலைக் கழகம் செயல்பட உள்ளது.

தமிழில் நவீன மென்பொருள்களை உருவாக்குவதற்கு ஒரு கோடி ரூபாய் மானியம் அளித்துள்ளது. தமிழில்பிரவுசர்கள், தேடு கருவிகள், இணைய தள பெயர்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற வளர்நிலையில் தமிழைப்பயன்படுத்துவது குறித்து முனைப்புடன் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுஉறுதி பூண்டுள்ளது.

1999-ல் நடந்த தமிழ் இணைய மாநாட்டை தொடர்ந்து ஏற்பட்டுள்ள புதிய படைப்புகளும் நவீன ஆய்வுமுயற்சிகளும், எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தன. இன்னும் உறுதியாகவும், வேகமாகவும் இணையத்தில் தமிழைச்செயல்படுத்த தேவையான முயற்சிகளுக்கு இம்மாநாடு வழிகாணும் என்று பெரிதும் நம்புகிறேன்.

விரைவில் செயல்படவிருக்கும் தமிழ் இணையப் பல்கலைக் கழகம், அதைச் சார்ந்த இணைய நூலகம், தமிழ்க்கல்வியும், தமிழ் வழிக் கல்வியும் தமிழ் இலக்கியங்களும் உலகெங்கும் எளிதாக கிடைப்பதற்கு ஏற்ற வகையில்தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு இம்மாநாடு தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறேன்.

10 ஆண்டுகளின் முன்னேற்றத்தை ஓராண்டில் சுருக்கி வெற்றி காண, உலகெங்கும் வாழும் எட்டு கோடித்தமிழர்களும், இம்மாநாட்டின் திசை காட்டும் குறிக்கோளால் ஈர்க்கப்படுவார்கள். இம்மாநாட்டின் ஒருமித்தபரிந்துரைகளை தமிழ்நாட்டில் செயல்படுத்த எமது அரசு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளும் என்றுகூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X