For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

non stop பஸ் (கட்டுரை) மூலம் கின்னசுக்கு செல்லும் இளைஞர்

கோவை:
பஸ் பயணத்தைப் பற்றி ஒரே மூச்சில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த சீனிவாச ராகவன்.

கட்டுரை தானே, இதில் என்னய்யா விசேஷம் என்கிறீர்களா?. 1180 வார்த்தைகள் கொண்ட இந்த கட்டுரையில் இடையில் முற்றுப் புள்ளியே கிடையாது.வெறும் கமாக்கள் மட்டுமே போட்டு அனுமார் வால் கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் ஒரு வார்த்தையை ஒரே ஒரு இடத்தில்மட்டும் பயன்படுத்தியிருக்கிறார். எந்த வார்த்தையும் repeat செய்யவில்லை.

பட்டப்படிப்பு மட்டுமே முடித்திருக்கும் சீனிவாச ராகவன், உளவியல்(சைக்காலஜியில்) குறித்து ஒரு சொற்பொழிவே ஆற்றும் அளவு கை தேர்ந்திருக்கிறார்.ஒருவர் பஸ்சில் பயணம் செய்யும்போது, பல சம்பவங்களைப் பார்க்க நேரிடும்.இதுகுறித்து நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் சீனிவாசன்.

இந்திய பஸ்களில் பயணம் செய்வோர், சாதி, சமயம், இனம் மொழி, கலாச்சாரம் எனஅனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பர். ஒவ்வொருவரும் ஒரு விதஎண்ணத்தில், உணர்வுகளில் பயணம் செய்வார்கள்.

சிலர் மகிழ்வோடு சென்று கொண்டிருக்கலாம். சிலர் "உர்" என்ற முகத்துடன்உட்கார்ந்திருக்கலாம். இன்னும் சிலரோ, துக்கத்தைச் சுமந்து சென்றுகொண்டிருப்பார்கள். பலரோ, டென்ஷனோடு நகத்தைக் கடித்தபடி சீட்டின் நுனியில்அமர்ந்து சென்று கொண்டிருபபார்கள். இப்படிப் பல.. இதையெல்லாம் தனதுகட்டுரையில் கூறியிருக்கிறார் சீனிவாச ராகவன்.

சாதனைக்காக மட்டும் வார்த்தைகளைப் பொறுக்கிப் போட்டு நிரப்பி விடவில்லை.ஒரு நல்ல கட்டுரையாகவும், இந்திய கலாச்சார உணர்வுகளை உள்ளடக்கியதாகவும்வார்த்தைகளைத் தந்திருக்கிறார்.

இந்த கட்டுரையில் பஸ் என்ற வார்த்தை ஒரு முறை தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.முடிவில் ஆச்சரியக் குறியில் முடித்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

இந்தக் கட்டுரையில் எந்த இடத்திலும் புள்ளியில்லை. முற்றுப் புள்ளியில்லாமலேயேகட்டுரை முற்றுப் பெறுகிறது.

சுவாரஸ்யமாக செல்லும் இந்த பஸ் பயணத்தை நீங்களும் கூட ஒரு முறை ரசிக்கலாமே!என்ன ரெடியா...? எங்கும் நிற்காமல் செல்லும் இந்த பஸ்சில் கமா தான் உண்டு.பயண தூரம் 1180 வார்த்தைகள்!

இந்த பஸ் கட்டுரை படிக்க இங்கே வாங்க....

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X