For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

வையாபுரியின் ஏக்கம்

நடிகர் வையாபுரி இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வரிசையாகப் படங்கள். இரண்டு, மூன்றுஷிப்டுகளில் பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் அவரை, "பார்த்தேன் ரசித்தேன்" படப்பிடிப்பில் சந்தித்தோம்.தனது அடி மனதில் தேக்கி வைத்திருந்த பல விஷயங்களை அவர் மனம் விட்டுப் பேசினார்.

1986-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் சென்னைக்கு வந்தேன். எழும்பூரில் உள்ள வசந்தபவன் ஓட்டலில்சர்வராகச் சேர்ந்தேன்.

நடிகனாக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகளைத் தேடினேன். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் தயாரிப்பாளர்கள், டைரக்டர்களைச் சந்திக்க ஸ்டுடியோக்களுக்கு அலைந்தேன்.

மற்றவர்களைப் போல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு நாடக அனுபவமோ மற்ற எந்த நடிப்புஅனுபவமோ ஏதும் இல்லை.

நடிகனான பிறகு சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளுக்கு நட்சத்திர இரவுக்காகச் சென்ற போதுதான்முதன்முறையாக மேடை ஏறினேன். அப்புறம் கார்கில் நிதிக்காக சென்னை, மதுரையில் மேடை ஏறி இருக்கிறேன்.

என் முதல் விமானப் பயணம் ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்ததுதான். ஹைதராபாத்தில் பகலில்படப்பிடிப்பு,

சென்னையில் இரவில் படப்பிடிப்பு என்ற இக்கட்டான நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஹைதராபாத்துக்கும்,சென்னைக்கும் விமானத்தில் பறந்தேன்.

முதலில் பயணம் செய்த போது காதில் பஞ்சு வைத்துக் கொண்டு பயந்த நான், அடுத்த நாளில் ரொம்ப பழகியவன்போல நடந்து கொண்டேன்.

நடிக்க ஆரம்பித்து ரொம்ப நாள் வரை, பஸ்ஸில்தான் போய் வந்து கொண்டிருந்தேன். நண்பர்களின்வேண்டுகோளை ஏற்று ஒரு டிவிஎஸ் 50 வாங்கினேன். அந்த வண்டி வாங்கிய வேளை அதிர்ஷ்டமான வேளைஎன்று கருதுகிறேன்.

இல்லையென்றால் அடுத்த இரண்டே மாதத்தில் நான் மாருதி கார் (வெள்ளைக் கலர்) வாங்கியிருக்க மு டியுமா?

நான் சென்னைக்கு வந்து 10, 15 வருடங்களாகி விட்டது. அண்ணா சாலையில் பிரபலமான தேவி, சாந்திதியேட்டர்களுக்குச் சென்று சினிமா பார்த்ததில்லை. இது உண்மை. சத்தியம்.

சமீபத்தில் சாந்தி தியேட்டரில் தை பொறந்தாச்சு படம் பார்க்கலாம் என்று விவேக் அழைத்துச் சென்றார்.ரசிகர்களோடு உட்கார்ந்து பார்த்ததில் ஒரு தனி சுகம் தான்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது மேட்னி ஷோ பார்த்த கூட்டம், ஈவினிங் ஷோ பார்க்கக் காத்திருந்தகூட்டம் மோதிக் கொள்கிற அளவுக்கு பெரும் கூட்டம். என்னையும் விவேக்கையும் அந்த கூட்டம் அடையாளம்கண்டு கொண்டது. நாங்கள் வகையாக மாட்டிக் கொண்டோம்.

எங்கள் கார் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து ஏறி தப்பி வருவதற்குள் பெரிய கஷ்டமாகிவிட்டது. இருப்பினும்ரசிகர்களின் அன்புத் தொல்லையில் சிக்கி ஒரு தனி சுகத்தை அப்போது உணர முடிந்தது.

நம்மை நாலு பேர் பார்க்கமாட்டார்களா என்று நான் ஏங்கிய காலத்தை ஒரு முறை பின்னோக்கிப் பார்க்கிறேன்.

ஹேராம் படத்தின் பிரிவியூவை தேவி தியேட்டரில் பார்க்க கமல் சார் ஏற்பாடு செய்திருந்தார். எனக்குஅழைப்பிதழ் கொடுத்திருந்தார். தேவி தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் ஹேராம்தான்.

இந்தப் படத்தில் நடித்த அனைவரையும் காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்ல கமல்சார் ஏற்பாடு செய்துஎன்னையும் ஒரு நடிகனாக மதித்து, அதில் நடித்த எல்லா நட்சத்திரங்களுக்கும் என்னை இவர்தான் மிஸ்டர்வையாபுரி என்று அறிமுகம் செய்து வைத்ததை மறக்க முடியாது.

எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பெருமையாக இருந்தது. எல்லோருக்கும் மேலே மூடப்படாதகார் கொடுத்தது போல் எனக்கும் தனி கார் கொடுத்திருந்தார். என் கண்கள் கலங்கிவிட்டது.

ஒரு காலத்தில் இந்த அண்ணா சாலையில் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் காலில் செருப்புக் கூட இல்லாமல் சுற்றிவந்த நாட்கள் என் கண் முன்னால் மின்னி மறைந்தது.

அண்ணாசாலையில் ஒரு தனிக்காரில் ரசிகர்களைப் பார்த்து கையசைத்தபடி நான் சென்றபோது கமலஹாசனுக்கு ஜேஎன்று என் வாய் முனுமுனுத்தது. அவர் நன்றாக இருக்கவேண்டும் என்று என் இதயத்தின் அடித்தளத்தில்ஜெபித்தபடியே போனேன்.

நடிக்க சான்ஸ் கிடைக்காவிட்டால் என்ன, சினிமா சம்பந்தப்பட்ட எந்த துறையிலாவது இறங்கி பிறகு நடிப்பில்இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் எடிட்டிங் அஸிஸ்டெண்டாக நான்கைந்துபடங்களுக்கு வேலை செய்திருக்கிறேன்.

கருத்தம்மா படத்தில் ஒரு சீனில் நான் நடித்திருக்கிறேன். அவர் தயாரிக்க அவரது மகன் நடிக்க ஷரண் இயக்கும்அல்லி அர்ஜூனா படத்தின் பூஜைக்கு அவரது அலுவலகத்துக்குப் போனபோது வாய்யா வையாபுரி என்று வாய்நிறைய பலமாக அழைத்து வந்திருந்த அனைவரின் பார்வையும் என் மீது பதியும்படி செய்ததோடு, நிறையபடங்களில் உன்னைப் பார்க்கிறேன் என்று பாராட்டியது எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்தது இன்னொருவிஷயம்.

இவ்வளவு சந்தோஷங்களுக்கு நடுவில் சில வருத்தங்களும் உண்டு. சிறு வயதில் என் தந்தை இறந்தபோது கூடகண்ணீர்விட்டு அழாதவன் நான். வறுமையின் கொடுமைக்கு ஆளானபோது கூட கலங்காதவன் நான்.

என் அண்ணன் மற்றும் அக்காவின் கண்காணிப்பில் இருக்கிறார் என் வயதான தாய். எனது அண்ணன், அக்கா,தம்பி எல்லோருமே தேனியில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் பிறந்தவுடன் என் பணம்வந்ததா இல்லையா என்ற ஒரு கவலை மட்டுமே உண்டு.

ஒரு சதவீதம் கூட என்னைப் பற்றி அக்கறை கிடையாது. நானும் சென்னைக்கு வந்து 15 வருடங்களாகி விட்டது.ஒருநாளாவது என் நலன் விசாரித்து ஒரு கடிதம் கூட போட்டதில்லை.

ஆனால், ஊர் பேர் தெரியாத பலர் அண்ணா, தம்பி, மாமா என்று எனக்கு பல ரசிகர்கள் கடிதம் எழுதுவதைப்பார்த்து நான் கண் கலங்கி இருக்கிறேன். என் வீட்டாரிடம் காணாத பாசத்தை இவர்களிடம் காணமுடிகிறது.

மூணாறு எஸ்டேட்டிலிருந்து ஒரு ரசிகர் உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை என்று கேள்விப்பட்டேன். என்நண்பரின் மகள் மிகவும் அழகாக இருப்பாள். நான் போட்டோ அனுப்பி வைக்கவா என்று கேட்டு எழுதியிருந்தார்.

இன்னொரு பெண் ரசிகை, நீங்க தப்பா நினைக்காவிட்டால் என் தோழியின் போட்டோவை அனுப்பி வைக்கிறேன்.பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் திருமணம் பற்றிப் பேசலாம் என்று எழுதியிருந்தார்.

இப்படி எங்கோ, எந்த தாய், தகப்பன் பெற்ற பிள்ளையோ என் மீது காட்டும் அன்பையும், பாசத்தையும் பார்த்துநான் புல்லரிக்கிறேன்.

எனக்கு இன்னொரு விஷயம் இன்று வரை புரியவே இல்லை. நானும் ரசிகர்கள் எனக்கு எழுதும் கடிதங்களைவிடாமல் படித்துப் பதில் எழுதி வருகிறேன். ஆனால், என் சொந்த ஊராகிய தேனியிலிருந்து ஒரு ரசிகர் கடிதம்வந்ததே இல்லை. ஏன்.......?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X