For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம் கடலில் ஆடி நீராடிய பக்தர்கள்

ராமேஸ்வரம்:

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்கள்மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

ஆடி அமாவாசை நாளில் புனித ஸ்தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடி தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றநம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. எனவே ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.

கடந்த 10 ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22புனித தீர்த்தங்களிலும் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். பகல் 11 மணிக்கு ஸ்ரீராமர் கருட வாகனத்தில் அக்னி தீர்த்தக் கரையில் தீர்த்தவாரி வழங்கினார்.இரவில் அம்பாள் வெள்ளிரதம் நான்கு ரத வீதிகளில் உலா வந்தது.

லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் ராமேஸ்வரம் நகரம் மக்கள் வெள்ளத்தில் திணறியது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகஅரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது. சுவாமி தரிசனத்துக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X