For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாலா அமர்நாத் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரும், அவருடன் பிடித்துச் செல்லப்பட்ட மூன்று பேர்களும், விரைவில் மீட்கப்படுவார்கள் என்றுஎதிர்பார்க்கிறோம்.

வீரப்பனால் கடத்தப்பட்டிருப்பவர் ஒரு முக்கியமான புள்ளி என்பதாலும், கர்நாடக மாநிலத்தில் பெருவாரியான மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர்என்பதாலும், இந்தக் கடத்தல் விவரத்தில் இரு மாநில அரசுளும் நியாயமான அக்கறையும் முனைப்பும் காட்டுகின்றன. ஆனால் வீரப்பனை பிடிக்கும்விஷயத்தில் இவர்களுக்கு அக்கறை இருப்பதாகவும் தெரியவில்லை. முனைப்பும் காட்டவில்லை.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் - பலன் இருந்ததோ இல்லையோ - சடங்கு நடத்துகிற மாதிரியாவது வீரப்பனை பிடிக்கும் முயற்சிகள் நடைபெற்றன.சூரசம்ஹார உற்சவம் வருடா வருடம் நடக்கிற மாதிரி, அவ்வப்போது வீரப்ப சம்ஹார உற்சவமாவது நடந்தது. இப்போது அது கூட இல்லை.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வீரப்பன் கோஷ்டியில் ஏழு அல்லது எட்டு பேர்தான் என்ற நிலை ஏற்பட்டது: இப்போது 100 பேர் கொண்ட கோஷ்டியாகஅது வளர்ந்திருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த தி.மு.க. அரசு வீரப்பனை பிடிப்பதில் காட்டி வரும் அக்கறையின் லட்சணம் இதுதான். இப்போது வீரப்பனுடன் பேரம் பேசியாக வேண்டும்.நல்லவேளையாக நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் வீரப்பனை அறிந்தவராக இருப்பதால், தூதுவர் தேர்வில் சிரமம் இருக்கவில்லை.

பொது மன்னிப்புக் கொடு... அதோடு இத்தனை கோடி கொடு என்றெல்லாம் வீரப்பன் கேட்க, எத்தனை கோடி கொடுப்பார்கள் என்பது ரகசியமாகவைக்கப்பட்டு பணம் கைமாற, ஒரு பேரம் நடந்து முடிய வேண்டும்.

என்ன செய்வது? ஜனநாயக முறையில் சட்டத்தின் மாட்சிமை இப்படிப்பட்டதாக இருக்கிறது. ஒரு கொலை செய்தால் கொலைகாரன் - வழக்கு நடந்துஅவனுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும்: நூறு கொலைகள் செய்தவன் கொலைகாரன் இல்லை, தீவிரவாதி- அவனோடு பேச்சு வார்த்தைநடத்தவேண்டியதுதான் - நைஸாக ஒதுங்கி நிற்பதைத் தவிர சட்டத்திற்கு வேறு வழியில்லை.

எதுவுமே பெரிதாக இருந்தால் சட்டத்திற்கு வேறு வழியில்லை. எதுவுமே சாதாரண ஆள் பாங்க்கில் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி, பிறகு அதைகட்டவில்லை என்றால், அவன் வீடு ஏலத்தில் விற்கப்படும்: அதுவே 500 கோடிரூபாய் கடன் வாங்கி கட்டாமல் இருந்தால் பேங்க் அவனோடுபேரம் பேச ஆரம்பிக்கும். அரசுக்குச் சொந்தமான மரத்தை வெட்டுபவனுக்கு அபாரதம் உண்டு: நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டினால்தலைவராகலாம்.

வீரப்பனோ ஆயிரக்கணக்கில் மரங்களையும், நூற்றுக்கணக்கில் மனிதர்களின் தலைகளையும் வெட்டியவன். ஆகையால் பொது மன்னிப்புக் கோரும் உரிமைஅவனுக்கு வருகிறது.

சன் டி.வி.யில் அவனை ஒரு வீரனாகச் சித்தரிக்க முடிகிறது: அவனுடைய குடும்பத்தைப் பராமரிக்க கட்சிகள் தயாராக இருக்கின்றன: இப்படி அவனுடயைவீரத்திற்கும். தியாகத்திற்கும் அங்கீகாரம் கிடைத்த பிறகு, அவனைப் பிடிப்பதிலோ, அவனை சட்டத்தின் முன் நிறுத்துவதிலோ. யார் அக்கறை காட்டப்போகிறார்கள்?

ப்ளாட்ஃபாரத்தில் காய் கறி வியாபாரம் செய்கிற கிழவியிடம் போலீசார் காட்டுகிற வீரத்தைப் பார்த்து, மகிழ்ந்து நமது போலீசாரின் திறமையைப்பற்றி நாம் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

தண்ணீர் கேட்டு தெருவில் பானைகளை அடுக்கி மறியல் செய்யும் பெண்களை விரட்டி அடிப்பதில், அரசு காணும் வெற்றியை நினைத்து நமது ஆட்சியின்மாட்சிமை பற்றி நாம் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். கதையை வளர்ப்பானேன்? சுருக்கமாகச் சொல்லி முடிப்போம். நமக்குவெட்கமில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X